Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:57:04 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14164
#KOTW14164
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 23, 2014
அபூதபீ அவ்காஃபுடன் இணைந்து இந்திய சமூக கலாச்சார மையம் நடத்திய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் காயலர் முதலிடம் பெற்று சாதனை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4050 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அபூதபீ அவ்காஃபுடன் இணைந்து இந்திய சமூக கலாச்சார மையம் நடத்திய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். விரிவான விபரம் வருமாறு:-

ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீயிலுள்ள இந்திய சமூக கலாச்சார மையம் (Indian Social & Cultural Centre), அபூதபீ அவ்காஃபுடன் இணைந்து, மறைந்த ஷெய்க் ஸாயித் பின் ஸுல்தான் அல் நஹ்யான் நினைவாக, அபூதபீயில் வசிக்கும் மக்களுக்காக திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டியை இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் ரமழான் மாதங்களில் நடத்திட திட்டமிட்டுள்ளது.



நடப்பாண்டு போட்டி இம்மாதம் 19 முதல் 22ஆம் நாள் வரை, திருமறை குர்ஆனில் 10 ஜுஸ்உகள் மனனம் செய்தோர், 20 ஜுஸ்வுகள் மனனம் செய்தோர், முழுமையாக மனனம் செய்தோர் ஆகியோருக்காக - வயது வரம்பு அடிப்படையில் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது.

இப்போட்டிகளில், அபூதபீயில் வசிக்கும் - மொரோக்கோ, சிரியா, எகிப்து, எமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஹாஃபிழ்களும், அபூதபீயிலுள்ள உள்ளூர் ஹாஃபிழ்கள் மற்றும் பள்ளிவாசல்களின் இமாம்களும் பங்கேற்றனர்.

இப்போட்டியில் இந்தியர்களை அதிகளவில் பங்கேற்கச் செய்வதற்காக, அபூதபீயிலுள்ள இந்தியன் முஸ்லிம் ஃபோரம் தொடர் தூண்டுதலளித்து வந்தது. அத்தூண்டுதலின் பேரில், அபூதபீயில் பணிபுரியும் - காயல்பட்டினம் மர்ஹூம் நூ.த.முஹம்மத் மக்கீ ஆலிம் ஸித்தீக்கீ அவர்களின் பேரனும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் இமாம், சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் மக்கீ எம்.எம்.ஹாமித் லெப்பை ஃபாஸீயின் மகனுமான ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்தோர் பிரிவிற்கான போட்டியில் பங்கேற்று முதல் பரிசை வென்றுள்ளார்.

அவருக்கு, முதல் பரிசு பெற்றதற்கான விருதும், பணப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.













போட்டியின் நிறைவில், மலையாள மொழி தொலைக்காட்சிக்கு ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ பேட்டியளித்தார்.

தான் காயல்பட்டினம் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் பயின்று ஹாஃபிழுல் குர்ஆன் ஸனது பெற்ற மாணவர் என்றும், தான் ஹாஃபிழாக உருவாவதற்கு - மத்ரஸா முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் தன் பெற்றோர் மிகவும் துணை புரிந்ததாகவும் கூறிய அவர், அமீரகத்தில் தான் பணியாற்றும் நிறுவனம், இப்போட்டியில் பங்கேற்க இந்தியன் முஸ்லிம் ஃபோரம் தனக்களித்த தூண்டுதல், போட்டியில் பங்கேற்கையில் அபூதபீ காயல் நல மன்ற நிர்வாகிகள் தனக்களித்த முழு ஒத்துழைப்பு ஆகியவற்றுக்காக அவர் நன்றி தெரிவித்துப் பேசினார்.

அபூதபீயில் முதன்முறையாக நடைபெறும் திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்றமைக்காக, ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீயை - அபூதபீ காயல் நல மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட காயலர்கள் பாராட்டினர்.

அபூதபீயிலிருந்து...
தகவல்:
P.M.ஹுஸைன் நூருத்தீன்

படங்கள் & செய்தித் தொகுப்பு:
மவ்லவீ ஹாஃபிழ் S.M.B.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mohamed Irfan (Dubai) [23 July 2014]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36080

மாஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Congratz izzath
posted by Mohamed Aboobacker Siddique (Dubai) [23 July 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36083

Mashaa Allah.. May Allah (Swt) Give more success in your life. Allahu Akbar


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Solukku.ME.Syed Md Sahib (Qatar) [23 July 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36084

அஸ்ஸலாமுஅலைக்கும்.நமதூரை சேர்ந்தவர் என்ற மகிழ்ச்சியும்,நான் சார்ந்த முகல்லாவை சேர்ந்தவர் என்ற மகிழ்ச்சியும்.அதிலும் என் மருமகன் என்ற மகிழ்ச்சியும் சேர்ந்து,மூன்று வகை மகிழ்ச்சி அடைந்தேன்.அல்ஹம்துலில்லாஹ்.

இன்னும் பல வெற்றிகள் அடைந்து நமதூருக்கும்,பெற்றவர்வர்களுக்கும்,பெருமை சேர்க்க இறைவன் அருள்பாளிப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Best of luck
posted by Moosa Sahib Abdul Majeed (Kayalpatnam) [23 July 2014]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 36089

Congrats my dear friend... May Allah bless you.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...மக்கி என்ற மூன்றெழுத்து
posted by mackie noohuthambi (kayalpatnam) [23 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36090

மக்கி என்ற மூன்று எழுத்துக்கு அப்படி என்ன இஸ்ஸத்? கேள்விக்கு விடை மிக சுலபமானது. அல்லாஹ்வின் திருமறை வசனங்கள் பல மக்காவில் அருளப்பட்டதால் அவற்றை மக்கி என்று அழைக்கிறோம். அல்லாஹ்வின் திரு தூதர் நபிகள் நாயகம் அவர்கள் மக்காவில் பிறந்ததால் அவர்களை மக்கி என்று அழைக்கிறோம். ஷாதுலியா தரீகாவின் தலைவர் சம்சுதீன் மக்கி என்று பிரபலமாகி இருக்கிறார்கள்.

காயல்பட்டினத்தில் இருந்து ஒரு ஆறு வயது சிறுவன் தன தந்தையுடன் மக்கா சென்றபோது அங்கே சம்சம் zamzam கிணற்றிலே கால் தவறி விழுந்து பின்னர் வெளியே வந்த போது அவனது தந்தை அவனை மக்கி என்று அழைத்து அன்றிலிருந்து அவன் மக்கி என்றே ஊரில் அறியப்பட்டான் எனபது செவிவழி செய்தி. அந்த சிறுவன்தான் பிற்காலத்தில் 60 ஆண்டுகாலம் இலங்கையின் மூலை முடுக்குகளிலெல்லாம் "மக்கி ஆலிம்" என்று பெயர் பெற்று மக்கள் உள்ளங்களை கவர்ந்து வலம் வந்தார்கள்.

எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழும் எங்கள் அன்பு தந்தை மக்கி ஆலிம் அவர்களுக்கு ஒரு பேரவா. வீட்டுக்கு ஒரு ஹாபில் உருவாக வேண்டும் என்ற அந்த ஆசை கொழுந்துவிட்டு அவர்கள் உள்ளத்திலே எரிந்த போது, அதை நடைமுறை படுத்த தன் மக்களை ஹாபில்களாக்கினார்கள்.தன தந்தையும் ஹாபில். தானும் ஒரு ஹாபில் . தன் சகோதரர் இலங்கையிலே இளம் வயதில் வபாத்தானபோது அவரும் ஒரு ஹாபிலாகவே இருந்தார்கள். அவர்கள் மகளுக்கு தேர்ந்தெடுத்த மருமகனும் ஒரு ஹாபில். சம்பந்தி ஒரு ஹாபில். பேரன்கள் பேத்திமார்கள் , பூட்டன் எல்லோரும் வீட்டுக்கு ஒரு ஹாபில் என்ற அவர்கள் கனவை நனவாக்கியபோது மக்கி ஆலிம் அவர்கள் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவில்லை.

கண்பட்டு விடுமோ என்று அவர்கள் பயந்து என்னை மட்டும் அந்த பட்டியலில் இருந்து எட்டி வைத்தார்கள் போலும்.

மாஷா அல்லாஹ் அவர்கள் பேரன் இஸ்ஸத் மக்கி அவர்கள் தமிழகத்தின் சார்பாக அமீரகத்தில் திருமறை மனன போட்டியில் கலந்து கொண்டு வெற்றிக் கனியை பறித்திருப்பது மனதுக்கு இன்பம் தரும் செய்தி. ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவர், சேவை செம்மல் - நூருல் ஹக் நுஸ்கி அவர்கள் சிற்பியாக இருந்து அவரை செதுக்கி எடுத்தார்கள். மாணவர் அணி படை தளபதியாக அவரை இந்த ஊரின் தெருக்களில் வீறு நடைபோட்டு செல்வதை பார்த்து மனம் மகிழ்ந்தார்கள்.. அவருக்கு பாடம் கற்றுக் கொடுத்த நல்லாசிரியர்கள் அவரை இந்த உயர் நிலைக்கு உருவாக்கினார்கள். அபூ தாபி நண்பர்கள் இவரை அங்கு அறிமுகப் படுத்தினார்கள்.எல்லோருக்கும் எங்கள் மக்கி ஆலிம் குடும்பம் சார்பாக எங்கள் இதயம் கனிந்த நன்றியை காணிக்கை ஆக்குகிறோம். ஜஸாக் குமுல்லாஹு க்ஹைரா சுக்ரன் ஜஸீலா. .

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய் - மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல் என்ற தமிழ் வாழ்த்துக்களும் இஸ்ஸத் மக்கி அவர்களுக்கு பெருமை சேர்க்கிறது. இந்த ஊருக்கும் பெருமை சேர்க்கிறது.

இவர் மூலம் ஹாபில்களின் relay race ஆரம்பமாகி இருக்கிறது. அந்த batton னை வாங்கிக்கொண்டு பின் தொடர்பவர்கள் புறப்படுங்கள் ஒரு புதிய விடியலை நோக்கி.

மதரசாக்கள் அழைக்கின்றன, "தாருங்கள் உங்கள் பிள்ளைகளை, நாங்கள் அவர்களை ஹாபில்களாக்கி உங்களிடம் திருப்பித் தருகிறோம்" என்ற அழைப்பு மணி ஹாமிதிய்யாவிலிருந்தும் ஜாவியாவிலிருந்தும் மஹ்லராவிலிருந்தும் அஸ்ஹரில் இருந்தும் ஊரின் நாலா பக்கங்களில் இருந்தும் ஒலிக்கிறது.வீட்டுக்கு ஒரு ஹாபில் என்ற எங்கள் தந்தையின் கனவை நனவாக்குவோம் வாருங்கள். அல்லாஹ்வின் ரஹ்மத் இந்த நல்ல நாளில் நம் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளட்டும். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [24 July 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36093

மாஷா அல்லாஹ்.

அபூதபீ அவ்காஃபுடன் இணைந்து இந்திய சமூக கலாச்சார மையம் நடத்திய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் நமது காயல் நகரை சேர்ந்த ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ள செய்தியை அறிந்து மிகவும் சந்தோசம் .

இவர் இவரது வாழ்வில் இன்னும் பல வெற்றிகள் அடைந்து நமதூருக்கும்,பெற்றவர்வர்களுக்கும்,பெருமை சேர்க்க இறைவன் அருள்பாளிப்பானாக ஆமீன்.

இவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறேன் .. வாழ்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வெற்றி பயணம் நில்லாமல் தொடரட்டும்..
posted by அபூதாஹிர் M.I.K. ( புனித மக்கா) [24 July 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36094

வெற்றி பெற்ற ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா மாணவர் ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீக்கு மனமாந்த வாழ்த்துக்கள். தம்பி இஸ்ஸத் மக்கிக்கு இந்த வெற்றி முதல் முறை அல்ல. அவர் ஓத துவங்கிய முதலே சாதனை படைத்து வருகிறார். மத்ரஸா ஹாமிதிய்யாவில் நடைபெறும் அனைத்து ஹிப்ழு தேர்விலும், போட்டியிலும் முதலிடம் பெறுவார் .

ஸனது பெரும் வருடத்தில் 13 முறை (தவுர்) குர்ஆனை மீள்பார்வை செய்து அந்த வருடத்தில் அதிக படியான தவுர் எண்ணிக்கை அடிப்படையிலும் சாதனை புரிந்தவர்.

தான் ஸனது பெற்ற 2004ம் வருட கல்வியாண்டில் அனைத்து தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று அவ்வருடத்தின் முதல் மாணவராக ஹாஃபிழுல் குர்ஆன் ஸனது பெற்றார்.

மேலும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஹிப்ழு போட்டியிலும் வெற்றி வாகை சூடி இருக்கும் இவர், தற்போது நாடு கடந்து சென்று முதலிடம் பெற்ற செய்தி ஊருக்கும், மத்ரஸாவிற்கும் பெருமையை சேர்க்கிறது. அவர் சார்ந்துள்ள மத்ரஸாவில் நானும் ஓதியவன் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி. அல்ஹம்துலில்லாஹ்.

வல்ல ரஹ்மான் அவரது நினைவாற்றலை இன்னும் அதிக படுத்தி வைப்பானாக!ஆமீன்!!

ஹாஃபிழ்கள் இல்லாத இல்லமே இல்லை என்ற பழைய நிலை நமதூரில் வர வேண்டும். என்ற சமூக ஆர்வலர் அல்ஹாஜ் மக்கி நூஹு தம்பி அவர்கள் போன்ற கருத்தாளர்களின் ஆசையை வல்ல ரஹ்மான் கபூல் செய்வானாக! ஆமீன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இதமான இனிய செய்தி!
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா – கத்தார்) [24 July 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36096

அல்ஹம்து லில்லாஹ்!

கண் குளிர்ச்சியான செய்தி!
மனதுக்கு உவகையூட்டும் இனிய நற்செய்தி!

பேராற்றல் மிக்க அல்லாஹ் தஆலா,
இளவல் மக்கி அவர்களின் மனனத்தை
நீடுழி காலம் நிலைத்திருக்கச் செய்து,
அருள்மறையின் நன்னெறிகளை
கூடுதல்-குறைதல்-இடைச்செருகல்-கற்பனைகள் இன்றி,
உள்ளதுஉள்ளபடி தெளிவுற உணர்ந்து,
“ஹப்லில்லாஹ்” என்னும் குர்ஆன்-சுன்னாவை
இறுக்கமாகப் பேணி வாழ்ந்திடும் நல்லோர்களின் கூட்டத்தில்
அவர்களையும், நம்மையும் ஒன்றிணையச் செய்திடுவானாக,
ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!

ஹாபிழ்களை அதிகமதிகம் உருவாக்குவதையே தம் வாழ்வின் பெரும்பணியாக மேற்கொண்ட மர்ஹும் சுல்தான் அப்பா [குருவித்துறைப் பள்ளி முன்னாள் இமாம்] போன்ற எண்ணற்ற நன்மக்களை இக்கணத்தில் நினைவு கூர்ந்து, அத்தகைய நல்லோர்களின் மண்ணறையை அல்லாஹ் ஒளிமயமாக்குவானாக! என்றும் இறையோனை இறைஞ்சுகிறேன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [24 July 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36098

மாஷா அல்லாஹ்.

மனம் நிறைந்த சந்தோசம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், இவரின் வாழ்வில் எல்லா வளத்தையும் வழங்கட்டும்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. மக்கி ஆலிம் புகழ் ஓங்குக !!!
posted by M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [24 July 2014]
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 36104

அபூதபீ அவ்காஃபுடன் இணைந்து இந்திய சமூக கலாச்சார மையம் நடத்திய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் நமது காயல் நகரை சேர்ந்த ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ள செய்தியை அறிந்து மிகவும் சந்தோசம் . அல்ஹம்து லில்லாஹ் .

இவரின் வெற்றி அவரின் பெற்றோர் , உற்றார் , உறவினர்கள் என அனைவருக்கும் கிடைத்த வெற்றியாக இருக்கும் அதே நேரத்தில் இவரை ஹாபிலாக் உருவாக்கிய அல்மத்ரசதுள் ஹாமிதியாவின் சங்கை மிக்க முதல்வர், ஆசிரியர்கள் , நிர்வாகிகள் , உறுப்பினர்கள் , பொறுப்பாளர்கள் , உதவியாளர்கள் , மாணவர்கள் என அனைவருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

மென்மேலும் பல, பல வெற்றிகளை இவர் பெற்றிடவும் , ஏனைய ஹாமிதியாவின் அணைத்து மாணவர்கள் வெற்றிகளை குவித்திடவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரமேந்தி இறைஞ்சிகிறேன் ! ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved