காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜமாஅத் அமீரகப் பிரிவின் கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து அதன் தலைவர் துணி உமர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜமாஅத்தைச் சேர்ந்த அமீரகப் பிரிவு கலந்தாலோசனைக் கூட்டம் இம்மாதம் 25ஆம் நாள் வெள்ளிக்கிழமை அஸ்ர் தொழுகைக்குப் பின், துபையிலுள்ள ஹாஜி விளக்கு தாவூத் வில்லாவில் நடைபெறவுள்ளது. கூட்டத்தைத் தொடர்ந்து இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த சகோதரர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.
உறுப்பினர்கள் அனைவரும் இச்செய்தியையே முறையான அழைப்பாக ஏற்றுக்கொண்டு, கூட்டத்தில் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் வருகையைப் பதிவு செய்வதற்கும், கூட்ட நிகழ்விடம் குறித்த விபரத்தைப் பெற்றுக்கொள்வதற்கும்,
சகோதரர் இப்றாஹீம் (கைபேசி எண்: 055 8006551)
சகோதரர் டீ.ஏ.எஸ்.மீராஸாஹிப் (கைபேசி எண்: 050 455 9791)
ஆகியோருள் ஒருவரைத் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
துபையிலிருந்து...
T.A.S.மீரா ஸாஹிப் |