காயல்பட்டினம் சொளுக்கார் தெருவில், மவ்லானா அப்பா சின்ன கல் தைக்காவில் இயங்கி வரும் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியில், வெளியூர் மாணவியர் தங்கிப் பயில்வதற்காக விடுதி வசதி உள்ளது. வெளியூரிலிருந்து கல்வி பயில வரும் மாணவியர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதையடுத்து, மாணவியர் தங்கும் விடுதியை விரிவாக்கிட கல்லூரி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில், கல்லூரியின் மாணவியர் விடுதி B Block கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, 20.06.2014 வெள்ளிக்கிழமையன்று 17.30 மணியளவில், ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத் தலைமையில் நடைபெற்றது.
ஹாஜி வெ.செ.இ.முஹம்மத் அலீ, ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், ஹாஜி எம்.பி.ஏ.ஜமால் முஹம்மத், நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் ஷெய்க் அப்துல் காதிர் ஜிஷ்தீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
கல்லூரியின் துவக்கம், அதன் அவசியம், வெளியூர் மாணவியருக்கு போதிய இடமளித்து கல்வியளிக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ நன்றி கூற, மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ துஆவுடன் மேடை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
நகரப் பிரமுகர்கள் தம் கைகளால் எடுத்துக் கொடுக்க, ஹாஜி புகாரீ மவ்லானா - கல்லூரியின் மாணவியர் விடுதி பி ப்ளாக் கட்டிடப் பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.
முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி மாணவியர் விடுதி துவக்கக் கட்டிட திறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |