ஜுலை 18 முதல் ஜுலை 28 வரை பாளையங்கோட்டை வ.உ.சி. திடலில் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இந்த புத்தக கண்காட்சியை
திருநெல்வேலி மாநகராட்சியும் நடுவணரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புத்தக அறக்கட்டளை National Book Trust - NBT நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன.
நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 09 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் இந்த புத்தக கண்காட்சிக்கு நுழைவு கட்டணம்
எதுவுமில்லை. 130 க்கும் மேற்பட்ட நூல் வெளியீட்டாளர்கள் / விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைத்துள்ள முக்கியமான சில நிறுவனங்களில் நேஷனல் புக் டிரஸ்ட், சாஹித்ய அகாடமி, இஸ்லாமிக்
பௌண்டேஷன் டிரஸ்ட், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம், உயிர்மை, காலச்சுவடு, பூவுலகின் நண்பர்கள், புலம் ஆகியோரும்
அடங்குவர்.
நேஷனல் புக் டிரஸ்ட், சாஹித்ய அகாடமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம், பூவுலகின் நண்பர்கள் போன்ற அரங்குகளில் பல
தலைப்புகளில் விலை மலிவான நல்ல பல நூல்கள் கிடைக்கின்றன.
ஒவ்வொரு நாளும் மாலை 04:30 மணியிலிருந்து இரவு 07 மணி வரை மனங்கவரும், மண்ணின் மணம் மிளிரும் கலை நிகழ்ச்சிகளும்
எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகளின் உரை கீற்றுக்களும் கலந்துரையாடல்களும் நடைபெறுகின்றன. அத்துடன் புகழ் பெற்ற வங்காள பட
இயக்குனர் மறைந்த சத்யஜித் ராயின் பெயரில் அமைக்கப்ப்ட்ட அரங்கில் நல்ல பல குறும்படங்கள், ஆவணப்படங்களும் இலவசமாக
திரையிடப்படுகின்றன.
பார்வையாளர்களின் வசதிக்காக உணவகங்கள், நடமாடும் பணம் எடுக்கும் மையம் ஆகியனவும் கண்காட்சி நடக்கும் பாளையங்கோட்டை
வ.உ.சி.திடலில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புகைப்படங்கள் தொகுப்பு ...
தகவல் மற்றும் புகைப்படங்கள்:
சாளை பஷீர்
|