எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் ஏழை மக்களுக்கான ஃபித்ரா உணவுப் பொருட்கள் வழமை போல இவ்வாண்டும் கூட்டு முறையில் வினியோகிக்கப்படவுள்ளது.
ஒரு நபருக்கு ரூபாய் 120 என்ற கணக்கில் ஃபித்ரா தொகை பெறப்பட்டு வருகிறது. தமது ஃபித்ரா கடமையை தமுமுக மூலம் நிறைவேற்ற விரும்பும் பொதுமக்கள், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களான
(1) முஹ்ஸின் முர்ஷித் (கைபேசி எண்: +91 98421 58232)
(2) ஜாஹிர் ஹுஸைன் (கைபேசி எண்: +91 99940 97217)
(3) முஜீபுர்ரஹ்மான் (கைபேசி எண்: +91 98949 80155)
ஆகியோருள் ஒருவரை, இம்மாதம் 26ஆம் நாள் சனிக்கிழமைக்குள் தொடர்புகொண்டு, தமது பங்களிப்பை உறுதி செய்துகொள்ளுமாறு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமுமுக காயல்பட்டினம் நகர கிளை சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடத்தப்பட்ட ஃபித்ரா உணவுப் பொருட்கள் வினியோகம் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |