காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் அல்மத்ரஸத்துல் ஹாமிதிய்யா நிர்வாகத்தின் சார்பில், இம்மாதம் 24ஆம் நாள் வியாழக்கிழமை மாலையில், மத்ரஸா வளாகத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மத்ரஸாவின் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மத்ரஸத்துல் ஹாமிதிய்யா முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ தலைமையில் குழுவினர் செய்து வருகின்றனர்.
ஹாமிதிய்யா சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ரமழானில் நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாமிதிய்யா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |