காயல்படடினம் குத்துக்கல் தெரு - காட்டு தைக்கா தெரு கீழ்ப்பகுதி ஆகியவற்றை அணைத்தாற்போல் அமைந்துள்ளது முஹ்யித்தீன் பள்ளிவாசல்.
ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ இப்பள்ளியின் தலைவராகவும், ஹாஜி எம்.எம்.சுல்தான் செயலாளராகவும், 15 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் இப்பள்ளி நிர்வாகத்தில் சேவையாற்றி வருகின்றனர்.
காயல்பட்டினம் கி.மு.கச்சேரி தெருவைச் சேர்ந்த நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா பள்ளியின் இமாமாகவும், சதுக்கைத் தெருவைச் சேர்ந்த எஸ்.எம்.முஹம்மத் மக்கீ பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர்.
நடப்பாண்டு நோன்புக் கஞ்சி தயாரிப்பு உள்ளிட்ட ரமழான் சிறப்பேற்பாடுகளைச் செய்திட, கத்தீப் இப்றாஹீம் தலைமையில், நோனா அபுல் காஸிம் என்பவரை செயலாளராகவும், ஜெ.முஹம்மத் உமர் என்பவரை ஒருங்கிணைப்பாளராகவும் கொண்டு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் மாலை 03.00 மணியளவில் ஊற்றுக்கஞ்சி வினியோகிக்கப்படுகிறது. இதனை அந்த மஹல்லாவைச் சேர்ந்த சுமார் 150 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர்.
ரமழானில் நாள்தோறும் நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், 60 முதல் 80 பேர் வரை பங்கேற்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், நோன்புக் கஞ்சி, குளிர்பானம், வடை வகைகள் உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்படுகிறது.
12.07.2014 அன்று இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட படக்காட்சிகள்:-
முஹ்யித்தீன் பள்ளியில் ஹிஜ்ரீ 1433இல் நடத்தப்பட்ட இஃப்தார் – நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஹ்யித்தீன் பள்ளியில் ஹிஜ்ரீ 1430இல் (2009ஆம் ஆண்டு) நடத்தப்பட்ட இஃப்தார் – நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஹ்யித்தீன் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு நகர பள்ளிகளின் இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |