| 
 தெலுங்கானா மாநிலம் - ஹைதராபாத் நகரில், காயலர்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் அமைப்பு ஹைதராபாத் காயல் நல மன்றம். இவ்வமைப்பின் சார்பில், இம்மாதம் 20ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில், மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.ஸல்மான் ஃபாரிஸ் இல்லத்தில், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
  
 
  
 
  
இந்நிகழ்ச்சியில், ஹைதராபாத் வாழ் காயலர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் ஹைதராபாத் ஹலீம், பேரீத்தம்பழம், கடற்பாசி, பழ வகைகள், வடை வகைகள், இஞ்சி தேனீர் என பல வகை உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. இஃப்தார் நிகழ்ச்சி நிறைவுற்றதும், மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. 
  
பின்னர் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்களியற்றப்பட்டன:- 
  
1. காயல்பட்டினத்தில்உள்ள மற்றஅமைப்புகளுடன் இணைந்து உதவிப் பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. 
  
2. அமைப்பின் புதிய தலைவராக எம்.எம்.ஸல்மான் ஃபாரிஸ் தேர்ந்தெடுக்கபட்டார். 
  
3. இந்த வருடம் ரமழான் மாதத்தில் 10 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் சமையல் பொருட்கள் வினியோகிக்கப்பட்டது. 
  
4. பயன்படுத்தப்பட்ட நல்லாடைகளை மன்ற உறுப்பினர்களிடமிருந்து சேகரித்து, ஏழைகள் பயன்பாட்டிற்காக தாயகத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. 
  
தகவல் & படங்கள்:  
அப்துல் பாரிஃ 
(Mob: +91 9948316779)  
செயலாளர் - ஹைதராபாத் காயல் நல மன்றம்
  
ஹைதராபாத் காயல் நல மன்றம் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!  |