காயல்பட்டினம் கி.மு.கச்சேரி தெருவில் அமைந்துள்ளது ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா.
இங்கு ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில், இம்மாதம் 07ஆம் நாளன்று பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
இஃப்தார் நிகழ்ச்சியில் நாள்தோறும் 25 முதல் 50 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
இங்கு, நோன்புக் கஞ்சிக்காகவும் முன்னோர்களால் சொத்துக்கள் சில வக்ஃப் செய்யப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து பெறப்படும் வருமானத்தைக் கொண்டு குறிப்பிட்ட சில நாட்களுக்கு கஞ்சி தயாரிக்கப்படுகிறது.
வெண்கஞ்சி அருகி வரும் இக்காலகட்டத்திலும், இங்கு அவ்வப்போது துவையலுடன் வெண்கஞ்சி பரிமாறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இங்கு நடைபெறும் ஐவேளைத் தொழுகையை, ஜாவியா அரபிக்கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் மாமுனா லெப்பை ஃபாஸீ இமாமாக இருந்து வழிநடத்தி வருகிறார். முஅத்தின் நியமனம் இல்லை. அந்தந்த தொழுகை வேளைகளின்போது அங்கிருப்போர் தொழுகைக்கான அழைப்பை (அதான்) ஒலிக்கின்றனர்.
இப்பள்ளியில் ரமழான் தராவீஹ் தொழுகையில் திருமறை குர்ஆன் முழுமையாக ஓதி முடிக்கப்படுகிறது. ஜாவியா அரபிக்கல்லூரியின் ஹிஃப்ழுப் பிரிவு மாணவர்கள் தொழுகையை வழிநடத்துகின்றனர்.
ஜாவியா மேலாளராக ஹாஜி எம்.எம்.முஹம்மத் நூஹ், செயலாளராக எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, துணைச் செயலாளராக ஹாஜி எம்.ஏ.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற சானா தானா ஆகியோரும், இன்னும் சிலர் நிர்வாகிகளாகவும் சேவையாற்றி வருகின்றனர்.
நடப்பு ரமழான் மாதத்தில் நாள்தோறும் இஷா தொழுகை 21.00 மணிக்கும், தராவீஹ் தொழுகை 21.15 மணிக்கும் துவங்குகிறது.
தகவல்:
ஹாஃபிழ் M.S.முஹம்மத் ஸாலிஹ்
ஜாவியாவில் ஹிஜ்ரீ 1432இல் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஜாவியாவின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்திகளைக் காண இங்கே சொடுக்குக!
ஜாவியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு நகர பள்ளிகளின் இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |