சவுதி அரசாங்க விதிகள்படி பெண்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆண் துணையுடன் (மஹ்ரம்) ஹஜ் பயணம் மேற்கொள்ளவேண்டும். ஹஜ் பயணியர் தேர்வு குலுக்கல் நாடு முழுவதும் நடைபெற்றபோது, ஏதோ ஒரு காரணத்திற்காக பெண் பயணி தேர்வு செய்யப்படாமல், அவரின் மஹ்ரம் மட்டும் தேர்வு செய்யப்பட்டால் - பெண் பயணி ஹஜ் பயணம் மேற்கொள்ளமுடியாத சூழல் எழும்.
மேலும் - வரும் ஆண்டுகளில் பெண் பயணி மீண்டும் விண்ணப்பம் செய்ய முற்படும்போது, அவரின் மஹ்ரம் முன்னரே (இந்திய ஹஜ் குழு மூலம்) ஹஜ் செய்து விட்டதால் (REPEATER), அவருக்கு மீண்டும் இடம் ஒதுக்கப்படாத சூழல் ஏற்படும்.
இதனை கருத்தில் கொண்டு, இந்திய ஹஜ் குழு - மேலே குறிப்பிடப்பட்டுள்ள முறையில் விடுபட்ட பெண் ஹஜ் பயணியர், தேர்வு செய்யப்பட்ட தங்கள் மஹ்ரம் உடன் பயணம் மேற்கொள்ள 200 இடங்களை ஒதுக்கியுள்ளது.
இவ்வாண்டு இந்த ஒதுக்கீடுக்கு 455 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது. அவர்களில் 200 விண்ணப்பங்களை தேர்வு செய்ய குலுக்கல், ஜூலை 18 அன்று நடைபெற்றது. அதில் தேர்வு செய்யப்பட்ட பயணியர் விபரம் வருமாறு:
|