காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், வழமை போல இவ்வாண்டும் இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி நேற்று (ஜூலை 18 - வெள்ளிக்கிழமை) 18.00 மணியளவில், பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை தலைமையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கிராஅத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பள்ளியின் அரபி மொழி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ, “நோன்பின் மகத்துவம்” எனும தலைப்பில் சிற்றுரையாற்றினார்.
நன்றியுரை, துஆ பிரார்த்தனையைத் தொடர்ந்து நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர் புட்டி, கறிகஞ்சி, வடை வகைகள், பழக்கூழ், குளிர்பானம் ஆகிய உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் துணைத் தலைவர் எஸ்.எம்.உஸைர், துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, கே.எம்.டி.மருத்துவமனை மேலாளர் அப்துல் லத்தீஃப், நகரப் பிரமுகர்களான ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், ஜெஸ்மின் கலீல், எல்.கே.துவக்கப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் நா.பீர் முஹம்மத், எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுற்ற பின்னர், மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
தகவல் உதவி:
ஆசிரியர் S.B.B.புகாரீ
கடந்த ஆண்டு (ஹிஜ்ரீ 1434) இப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |