ரமழான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் மிகுந்த மகத்துவமிக்கதாகும் என நபிகள் நாயகம் அவர்களால் கற்றுத் தரப்பட்டுள்ளது. அதன் காரணமாக, மற்ற நாட்களைக் காட்டிலும் அந்நாட்களில் இரவு நேரங்களில் வழிபாடுகள் அதிகளவில் நடைபெறும். இரவில் நீண்ட நேரம் தொழுதல், திக்ர் - தஸ்பீஹாத் உள்ளிட்டவற்றில் ஈடுபடல், நன்மையை நாடி - கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் எண்ணத்துடன் பள்ளிவாசலிலேயே தரித்திருத்தல் உள்ளிட்டவை அந்நாட்களில் செய்யப்படும் வழிபாடுகளில் குறிப்பிடத்தக்கவை.
நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், ஜாமிஆ மகுதூம் (மகுதூம் ஜும்ஆ பள்ளி), அப்பா பள்ளி, ஜாமிஉத் தவ்ஹீத் ஆகிய பள்ளிவாசல்களில், கடைசி 10 நாட்களையொட்டி, இஃதிகாஃப் - பள்ளியில் தரித்திருத்தல், கியாமுல் லைல் - இரவு நீண்ட நேரம் தொழுதல் ஆகிய வழிபாடுகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில், இஃதிகாஃப் நேற்றுடன் (ஜூலை 18 பின்னிரவு) துவங்கியது. நள்ளிரவு 02.45 மணி முதல் 03.45 மணி வரை கியாமுல் லைல் தொழுகையும் நடத்தப்பட்டு வருகிறது.
ஜாமிஆ மகுதூம் – மகுதூம் ஜும்ஆ பள்ளியில் இன்று (ஜூலை 19) பின்னிரவுடன் இஃதிகாஃப் துவங்குகிறது. கியாமுல் லைல் நேற்று இரவிலிருந்து துவங்கியுள்ளது. 23.45 மணிக்கு கியாமுல் லைல் தொழுகை துவங்குகிறது. இத்தொழுகையில், திருமறை குர்ஆனிலிருந்து ஒரு நாளுக்கு 3 ஜுஸ்உகள் வீதம் 10 நாட்களில் முழு குர்ஆனும் ஓதி முடிக்கப்படவுள்ளது.
நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த - திருமறை குர்ஆனை மனனமிட்டுள்ள ஹாஃபிழ்கள் இத்தொழுகையை வழிநடத்துகின்றனர்.
இப்பள்ளிகள் தவிர, தீவுத்தெரு பெண்கள் தைக்கா, குத்துக்கல் தெரு யாக்கூத்துல் அர்ஷ் பெண்கள் தைக்கா உள்ளிட்ட - பெண்கள் தொழும் தைக்காக்களிலும் ரமழான் கடைசி பத்து நாட்களில் கியாமுல் லைல் தொழுகை நடத்தப்பட்டு வருகிறது.
தகவல் உதவி:
K.S.முஹம்மத் யூனுஸ்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) நடைபெற்ற இஃதிகாஃப், கியாமுல் லைல் வழிபாடுகள் குறித்த செய்திகளைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 19:49 / 19.07.2014] |