ஜூலை 20 ஞாயிறு அன்று செயற்குழு ஆலோசனை கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி, காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு அமைப்பு (KCGC) ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. இது குறித்து அவ்வமைப்பின் நிர்வாக அலுவலர் ஹைதர் ஹுசைன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் அவன் திருப்பொறுத்தத்திற்காக வாழும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக ஆமீன்.
புனித ரமளானின் பொற்காலத்தை இறை உவப்பையும் மறுமை வெற்றியையும் பெறும் பொருட்டு நிறைவாகப் பயன்படுத்தி அந்த வல்லோனின் நல்லருளை பெற்றேக கருணையுள்ள ரஹ்மான் நம் யாவருக்கும் உதவி செய்வானாக ஆமீன்.
KCGC-ன் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி – 20.07.2014
அன்பிற்குரிய சகோதரர் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது KCGC-ன் கடந்த செயற்குழு கூட்டம் அல்லாஹ்வின் கிருபையால் சென்ற 15-06-2014, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:30 மணி முதல் சென்னை மண்ணடி கே.சி.ஜி.சி அலுவலகத்தில் துவங்கி நடைபெற்றது. (அல்ஹம்துலில்லாஹ்).
அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற செயல்பாடுகள் குறித்து மீளாய்வு செய்து தொடர்ந்து பணிகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் நமது அடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 20-07-2014, ஞாயிற்றுக்கிழமை, சென்னை மண்ணடி கே.சி.ஜி.சி அலுவலகத்தில் மாலை 04:00 மணி முதல் 06:00 மணி வரை ஆலோசனைக் கூட்டமும் அதனைத் தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சி விபரம் : இன்ஷா அல்லாஹ்
நாள் : ஜூலை – 20 – 2014, ஞாயிற்றுக்கிழமை
காலம் : மாலை சரியாக 04:00 மணி.
இடம் : எண் 1, உசேன் மரைக்காயர் லேன், மூர் தெரு. மண்ணடி, சென்னை-1.
அவ்வமயம் உறுப்பினர்கள் குறித்த நேரத்திற்கு தவறாமல் வருகை தருவதுடன் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி சிறப்புற செயல்பட உதவுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் நமது KCGC-யுடன் இணைந்து செயலாற்ற விரும்பும் சகோதரர்கள் இந்நிகழ்வில் பங்குகொள்ள அன்புடன் அழைக்கின்றோம். விருப்பமுள்ள சகோதரர்கள் கீழ்காணும் அலைப்பேசி எண்ணில் தொடர்புக் கொண்டு வருகின்ற சனிக்கிழமை (19.07.2014) மாலை 05:00 மணிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
ஹைதர் உசேன் (நிர்வாக அலுவலர்) : +91 87544 09169
வல்ல ரஹ்மான் நம் எண்ணங்களைத் தூய்மையாக்கி நம் காரியங்களை வெற்றியாக்கி ஈருலகிலும் நம் யாவரையும் மேன்மைப்படுத்துவானாக, ஆமீன். வஸ்ஸலாம்.
தங்களன்புச் சகோதரன்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்,
செயலாளர், KCGC.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|