2007 - 2008 காலகட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சியில் - 14 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். தற்காலிக நோக்கில் நியமனம் செய்யப்பட்ட அவர்களின் பணிக்காலம், சர்ச்சைக்குரிய சூழலில் ஏறத்தாழ 7 ஆண்டுகள் நீண்டு, அவர்களில் 13 பேரின் பணி நீட்டிப்பு - இறுதியாக தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
வேலை பறிக்கப்பட்ட 11 தொழிலாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாத்திட தமிழக அரசை வலியுறுத்தி, இந்திய தொழிற்சங்க மையம் காயல்பட்டினம் கிளை சார்பில் இன்று 17.00 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து நகர் முழுக்க ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி அறிவிப்பு:-
தகவல்:
A.S.புகாரீ
காயல்பட்டினம் நகராட்சியின் ஒப்பந்தப் பணியாளர்கள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |