காயல்பட்டினம் கீழ நெய்னார் தெரு வடமுனையில் - கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் அமைந்துள்ளது மஸ்ஜிதுல் ஈமான் எனும் பெயருடைய கற்புடையார் பள்ளி.
இப்பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில், இம்மாதம் 07ஆம் நாளன்று பதிவு செய்யப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள் வருமாறு:-
இஃப்தார் நிகழ்ச்சியில் நாள்தோறும் 60 முதல் 80 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு, பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை உள்ளிட்டவை பரிமாறப்படுகிறது.
இப்பள்ளியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த அரபி எஸ்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன் இமாமாகவும், முஅத்தினாகவும் பணியாற்றி வருகிறார்.
இப்பள்ளியில் ரமழான் தராவீஹ் தொழுகையில் நாள்தோறும் திருமறை குர்ஆனின் சிறிய அத்தியாயங்கள் ஓதப்படுகிறது. நடப்பாண்டு தராவீஹ் தொழுகையை, பள்ளியின் இமாமே பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார்.
ஹாஜி ஏ.கே.ஷம்சுத்தீன் பள்ளியின் தலைவராகவும், ஹாஜி பி.எம்.என்.செய்யித் அப்துர்ரஹ்மான் செயலாளராகவும், ஹாஜி எம்.கே.எம்.புகாரீ பொருளாளராகவும் சேவையாற்றி வருகின்றனர்.
புதிதாக செயல்பாடுகள் துவக்கப்பட்ட பள்ளி இது என்பதால், அதன் நிர்வாகம் மற்றும் பராமரிப்புச் செலவினங்களுக்கு நன்கொடைகளை எதிர்பார்ப்பதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல்:
S.A.மஹ்மூத் தீபி
கற்புடையார் பள்ளியில் கடந்தாண்டு நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கற்புடையார் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கற்புடையார் பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களடங்கிய செய்திகளைக் காண இங்கே சொடுக்குக! பாகம் 2
நடப்பாண்டு நகர பள்ளிகளின் இஃப்தார் நிகழ்ச்சிகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |