நடப்பாண்டு ரமழான் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணையளித்தோருக்கு, காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் - கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியின் தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் ‘முத்துச்சுடர்’ என்.டீ.இஸ்ஹாக் லெப்பை ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:-
அன்பின் அனைத்துலக காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...
இறையருளால், இவ்வாண்டும் புனிதமிக்க ரமழான் மாதத்தில் நமது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி நிர்வாகத்தின் சார்பில், நாளொன்றுக்கு ரூபாய் 6,000 செலவு மதிப்பீட்டில், தினமும் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு, ஊற்றுக் கஞ்சி வினியோகமும், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியும் சிறப்புற நடத்தப்பட்டு வருகிறது.
இச்செலவினங்களுக்காக அனுசரணை கோரி நம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையை மதித்து, இப்பள்ளியை தங்கள் மஹல்லா பள்ளி போன்று கருதி உரிமையுடன் அனுசரணையளித்த அனைவருக்கும் எம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறோம், ஜஸாக்குமுல்லாஹு கைரா...
நடப்பாண்டு கஞ்சி ஏற்பாட்டிற்குத் தேவையான அனுசரணை முழுமையாக பெறப்பட்டு விட்டதால், இவ்வகைக்கு இனி அனுசரணையளிக்கத் தேவையில்லை என்பதை இதன் மூலம் அன்புடன் அறியத் தருகிறோம்.
கருணையுள்ள அல்லாஹ் நம் யாவரின் நற்கருமங்களையும் கபூல் செய்து, ஈருலக நற்பேறுகளை நமக்கு நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |