காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில், கடந்த 2013-14 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்று முடித்த 86 மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜூலை 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை) 16.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் டாக்டர் முஹம்மத் லெப்பை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, மடிக்கணினியை மாணவர்களுக்கு வழங்கி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
பள்ளியின் துணைத்தலைவர் எஸ்.எம்.உஸைர், பெற்றோர் - ஆசிரியர் சங்க செயலாளர் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, பள்ளியின் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா உள்ளிட்டோரும் மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கினர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
மற்றும்
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
தகவல்:
ஆசிரியர் S.B.B.புகாரீ
எல்.கே.மேனிலைப்பள்ளியில், கடந்தாண்டு (2013) தமிழக அரசின் மடிக்கணினி வழங்கப்பட்ட நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |