காயல்பட்டினம் - சென்னை வழிக்காட்டு அமைப்பின் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் தனிச்சுற்று இதழ், தற்போது KCGC BULLETTIN என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை - செப்டம்பர் 2014 காலாண்டுக்கான தற்போதைய இதழை காண இங்கு அழுத்தவும்.
ஏப்ரல் - ஜூன் 2014 காலாண்டுக்கான முந்தைய இதழை காண இங்கு அழுத்தவும்.
அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் அவன் உவப்பைப் பெற்றிட அனுதினமும் பாடுபடும் நம் யாவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக, ஆமீன்.
அன்பிற்கினிய சகோதரர் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
நமது கே.சி.ஜி.சி.யின் பணிகள் அல்லாஹ்வின் மாபெருங் கிருபையால் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன அல்ஹம்துலில்லாஹ்.
அதன் சமீபத்திய நிகழ்வுகளாக கடந்த டிசம்பர் மாதம் ஊரில் இருந்தபோது நம் செயற்குழு உறுப்பினர்களில் சிலர் ஷிஃபாவின் செயற்குழுவில் பங்கெடுத்தது, பிக்னிக் ஏற்பாடு செய்து குடும்பத்துடன் சென்று வந்தது, பள்ளி மாணவர்களுக்கான, கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியாக சென்னை ஐ.ஐ.டி.சென்று வந்தவை அடங்கும்.
மேலும், நமது பணியை விரிவாக்க இணையதளம் மற்றும் பத்திரிக்கை (செய்தி மடல்) வாயிலாக முழுமையாக செயல்படுத்த முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டு வந்தன. இணையதளம் மற்றும் பத்திரிக்கை செய்திகள் மூலமாக சென்னையில் வசிக்கும் காயலர்கள் மட்டுமல்லாமல் நமதூரில் வசிக்கும் மக்களும் பயன்பெற வேண்டும் என்பதே நமது உன்னத நோக்கமாகும்.
அதன் ஒரு அங்கமாக KCGC-யின் இலக்குகளில் ஒன்றாக இருக்கக்கூடிய “உயர்கல்வி வழிகாட்டல்” என்ற செயல்திட்டத்தை காலாண்டு பத்திரிக்கையின் வாயிலாக கொண்டு செல்ல வேண்டும் என்கிற நீண்ட நாட்களின் முயற்சியின் பலனாக, நமது முதல் பதிப்பின் வெளியீட்டை ”KCGC NEWS” என்ற பெயரில், 12 பக்கங்கள் கொண்ட இதழை கடந்த ஏப்ரல் மாதம் நமதூரில் “இக்ரா எஜுகேஷனல் சொசைட்டி” நிர்வாகிகள் மூலமாக பல பள்ளிக்கூடங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. மேலும் உறுப்பினர்களாகிய தங்களுக்கும் அதன் பிரதியை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நமது இரண்டாவது காலாண்டு (Jun-Sep-2014) இதழை ”KCGC BULLETIN” என்ற பெயரில் இம்மாதம் வெளியிட்டுள்ளோம். இனிவரும் காலங்களில் இதே பெயரில் வெளிவரும். இன்ஷாஅல்லாஹ்!.
இரண்டாம் காலாண்டு இதழை KCGC உறுப்பினர்களாகிய உங்களுக்கு இத்தருணத்தில் வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். எனவே சகோதரரே கீழே கொடுக்கப்பட்டுள்ள அலைப்பேசி எண்ணை தெடர்புக் கொண்டு உங்களது பிரதியை பெற்றுக்கொள்ளுங்கள். இரண்டு காலாண்டு பிரதிகளும் (APR-JUN 2014 & JUL-SEP 2014) உங்கள் பார்வைக்காக (Soft copy) இணைக்கப்பட்டுள்ளது.
ஹைதர் உசேன் – நிர்வாக அலுவலர் : +91-87544 09169
மேலும், இந்த “செய்தி மடலின் வடிவமைப்பு, அதன் கட்டுரைகள், தகவல்கள் குறித்த உங்களது மேலான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம்.
நமது அடுத்த காலாண்டு இதழில் (Oct-Dec 2014) செய்தியாக வெளியிட தங்களது பயனுள்ள கட்டுரைகள், ஆக்கங்கள் மற்றும் தகவல்கள் வரவேற்க்கப்படுகின்றன. வெளியிட விரும்புவோர் இதே மின்னஞ்சலில் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எண்ணங்களைத் தூய்மையாக்கி நம் காரியங்களை வெற்றியாக்கி ஈருலகிலும் நம் அனைவரையும் மேன்மைப்படுத்துவானாக, ஆமீன்.
ஜஸாகல்லாஹு ஃகைரா
வஸ்ஸலாம்.
இப்படிக்கு,
ஷமீமுல் இஸ்லாம்,
செயலாளர், கே.சி.ஜி.சி., சென்னை.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 4:30pm/20.07.2014] |