காயல்பட்டினம் பைத்துல்மால் வாராந்திர கூட்டங்களில், கடனுதவியாக 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், ஜகாத் நிதியுதவியாக 59 ஆயிரம் ரூபாயும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் சார்பில், வாராந்திர கடனுதவி, ஜகாத் நிதியுதவி வழங்குவதற்கான சிறப்புக் கூட்டங்கள் இம்மாதம் 08 மற்றும் 15 ஆகிய நாட்களில் காலை 11.00 மணிக்கு, பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றன.
அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், உதவிகள் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்கள் நேரில் அழைத்து விசாரிக்கப்பட்டு, தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்கூட்டங்களின்போது, கடனுதவியாக ரூபாய் 4 லட்சத்து 75 ஆயிரம் தொகையும். ஜகாத் உதவியாக ரூபாய் 59 ஆயிரம் தொகையும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இவ்விரு கூட்டங்களிலும், காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகிகளான வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், டூட்டி சுஹ்ரவர்த்தி, எம்.ஏ.எஸ்.அபூதாஹிர், புகாரீ, அய்யூப், ஷேக்னா லெப்பை ஆகியோர் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |