இந்திய ஹஜ் குழு மூலம் இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோர் 8 தினங்கள் மதினாவில் தங்குவர். மதினாவில் அவர்களுக்கு தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கட்டிடங்களில் சுயமாக சமையல் செய்ய வசதி கிடையாது. இதனை கருத்தில் கொண்டு, இந்திய ஹஜ் குழு, மதினாவில் தங்கும் ஹஜ் பயணியருக்கு உணவு ஏற்பாடு செய்துள்ளது.
சவுதி அரசாங்கத்தின் உரிமம் பெற்ற உணவு தயாரிக்கும் நிறுவனங்களின் மூலம் உணவு வழங்க, பயணியர் தங்கும் கட்டிடங்களை வாடகைக்கு வழங்குபவர்களுடன் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி - தினசரி சிறு அளவு காலை உணவும் (LIGHT BREAKFAST), இரண்டு பிரதான உணவும் (MEALS) வழங்கப்படும். இதற்கான கட்டணம் சவுதி ரியால் 120. அதாவது - சவுதி ரியால் 7.50 * 2 * 8.
பிராதன உணவில் -
[] சோறு (150 கிராம்)
[] சப்பாத்தி / ரொட்டி 2 எண்ணம் (100 கிராம்)
[] தாள் / சாம்பார் (150 கிராம்)
[] சுழற்சியில் கூட்டு காய்கறி / கோழிக்கறி / இறைச்சி (150 கிராம்)
[] ஊறுகாய்
[] தயிர்
- ஆகியவை வழங்கப்படும்.
உணவு கட்டணம் - பயணியரின் மொத்த கட்டணத்துடன் சேர்க்கப்பட்டுவிட்டது என்றும், இதற்கு தனியாக பயணியர் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் இந்திய ஹஜ் குழு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
|