காயல்பட்டினம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம், அரிமா சங்க காயல்பட்டினம் கிளை ஆகிய அமைப்புகள் இணைவில், நகரின் ஏழைப் பெண்களுக்கு பெருநாள் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில், கே.எம்.டி. மருத்துவமனையின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ தலைமையில் நடைபெற்றது.
எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை, எஸ்.எம்.உஸைர், லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், வி.டி.என்.அன்ஸாரீ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
கே.எம்.டி. மருத்துவமனை மேலாளர் கே.அப்துல் லத்தீஃப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
ஹாஃபிழ் கே.எம்.ஏ.ஷேக் முஹம்மத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். முஸ்லிம் மகளிர் உதவும் சங்க அமைப்பாளர் அ.வஹீதா வரவேற்றுப் பேசினார்.
பின்னர் துவங்கிய உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த 900 ஏழை மகளிருக்கு, நோன்புப் பெருநாளை முன்னிட்டு - புடவை, சுடிதார், அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. மேடையில் வீற்றிருந்த பிரமுகர்கள் அவற்றை பயனாளிகளுக்கு வழங்கினர்.
காயல்பட்டினம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்க அமைப்பாளர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா நன்றி கூற, மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நோன்புப் பெருநாளையொட்டி உதவிப் பொருட்கள் வழங்கப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |