காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் ஆண்டுதோறும் ரமழான் மாத கடைசி பத்து நாட்களில் கியாமுல் லைல் தொழுகை நடத்தப்படுவது வழமை.
நடப்பாண்டு ரமழான் கடைசி பத்து நாட்களில் கியாமுல் லைல் தொழுகை 23.45 மணிக்குத் துவங்கி, 01.15 மணியளவில் நிறைவுறுகிறது. இத்தொழுகையில் சுமார் 100 முதல் 150 பேர் வரை பங்கேற்கின்றனர். இம்மாதம் 20ஆம் நாளன்று நடைபெற்ற கியாமுல் லைல் தொழுகையின்போது பதிவுசெய்யப்பட்ட காட்சிகள்:-
ஒரு ஸலாமுக்கு 3 ஜுஸ்உகள் வீதம் 6 ஸலாம்கள் கொண்ட இத்தொழுகையில் திருமறை குர்ஆனிலிருந்து ஓதப்பட்டு, ரமழான் 29 அன்று முழு குர்ஆனும் ஓதி முடிக்கப்படுகிறது. 6ஆவது ஸலாம் தொழுகை ஒற்றை ரக்அத்தில் - வித்ர் தொழுகையாக நிறைவு செய்யப்படுகிறது. இத்தொழுகையில், நாள்தோறும் குனூத் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்கள் இத்தொழுகையை வழிநடத்துகின்றனர்.
தொழுகை நிறைவுற்றதும், பங்கேற்றோர் களைப்பைப் போக்குவதற்காக குளிர்பானமும், தின்பண்டமும் பரிமாறப்படுகிறது.
மகுதூம் ஜும்ஆ பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ரமழான் கடைசி பத்து நாட்களில் நடைபெற்ற கியாமுல் லைல் தொழுகை குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மகுதூம் ஜும்ஆ பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |