காயல்பட்டினம் ரயில்வே நிலையத்தின் நிலுவையில் உள்ள பணிகளை நிறைவேற்ற கோரி - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஏற்பாட்டில் - கடந்த பிப்ரவரி மாதம் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. பணியினை விரைவில் முடிப்பதாக தென்னக ரயில்வே சார்பாக வாக்குறுதி வழங்கியதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அதனை தொடர்ந்து - நிலுவையில் உள்ள பணிகளுக்கும், பிற ரயில் நிலையங்களில் வேறு சில பணிகளுக்கும் தென்னக ரயில்வே, மார்ச் 10 அன்று டெண்டர் அறிவிப்பு வெளியிட்டதாக தெரிகிறது. அறிவிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள், ஏப்ரல் 4 அன்று திறக்கப்படும் என்றும், காயல்பட்டினம் ரயில் நிலையம் குறித்த பணிகள் 9 மாதங்களில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அவற்றுக்கான மதிப்பு 38 லட்சத்து, 82 ஆயிரம் ரூபாய் என்றும் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு தெரிவிக்கிறது.
|