காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் “இஃப்தார் நிகழ்ச்சி” ஜூலை 20 ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற்றது. இது
குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
புனித ரமளானின் பொற்காலத்தை இறை உவப்பையும் மறுமை வெற்றியையும் பெறும் பொருட்டு நிறைவாகப் பயன்படுத்தி அந்த வல்லோனின்
நல்லருளை பெற்றேக கருணையுள்ள ரஹ்மான் நம் யாவருக்கும் உதவி செய்வானாக ஆமீன்.
நமது KCGC-ன் சார்பாக ஆண்டுதோறும் புனித ரமளான் மாதத்தில் நோன்பு துறக்கும் “இஃப்தார் நிகழ்ச்சி” நடத்தப்படுவது வழமை. அதனடிப்படையில்
இவ்வருடத்தின் இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் KCGC-ன் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் 20.07.2014 அன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது KCGC-யின் மாதாந்திர ஆலோசனைக் குழு கூட்டம் 20.07.2014, (ஞாயிற்றுக்கிழமை) சென்னை
மண்ணடியிலுள்ள KCGC-யின் புதிய அலுவலகத்தில் மாலை 04:40 மணி அளவில் துவங்கி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! அதனைத்
தொடர்ந்து இனிமையான இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
நோன்பு திறப்பதற்கு ருசியுடன் கூடிய சுவையான கறி கஞ்சி, பேரீத்தம் பழம், தண்ணீர், குளிர்பானம், கடல்பாசி, கறிவடை, முட்டை போண்டா,
மற்றும் பழங்கள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வில் கே.சி.ஜி.சி உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என பல சகோதரர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்!
செயற்குழு ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
AGM நடத்துவது:
KCGC-ன் இவ்வாண்டுக்கான “ஆண்டு பொதுக்கூட்டம்” (AGM), இன்ஷாஅல்லாஹ் எதிர் வரக்கூடிய 07.09.2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, AGM
நிகழ்ச்சிகளை சென்னை மண்ணடியிலுள்ள மியாசி (MEASI) பள்ளிக்கூடத்திலும், அதனைத் தொடர்ந்து மதிய உணவு விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி
நமது KCGC அலுவலகத்திலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகள் காலை 10:30 மணி முதல் தொடங்கி மதியம் 02:00 மணி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சி அழைப்பிதழ், உறுப்பினர் பட்டியல், KCGC-ன் செயல்பாடுகள் (Activities), உறுப்பினர் படிவம், (Membership
Application Form) படிவத்தின் பின்பக்கத்தில் “உங்களுக்குத் தெரிந்த சென்னை வாழ் காயலர்களின் விவரங்களை தெரியப்படுத்தவும்” என்ற படிவம்.
ஆகியவற்றை தயார் செய்ய வேண்டுமெனவும் அதன்பின் நமதூரைச் சார்ந்த முக்கியஸ்தர்களை நேரில் அணுகி அழைப்பு விடுக்க வேண்டுமென்றும்
முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈத்மிலன்:
KCGC-ன் செயல்திட்டங்களில் ஒன்றான ”ஈத்மிலன்” நிகழ்ச்சி நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. வரக்கூடிய செப்டம்பர் மாதத்தில் AGM நடத்த
திட்டமிட்டுள்ளதால், இன்ஷாஅல்லாஹ் அடுத்து வரும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கான ”ஈத்மிலன்” சந்திப்பை 19-10-2014 (ஞாயிற்றுக்கிழமை) அன்று
நடத்த இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
BULLETIN வெளியீடு:
KCGC-யின் இரண்டாவது காலாண்டு இதழான KCGC BULLETIN கடந்த 12.07.2014 அன்று நமதூரில் வெளீயிட அனுப்பி வைக்கப்பட்டது. இவ்விதழின்
சில பிரதிகளை இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் இவ்விதழை காயல்பட்டணத்திலுள்ள பள்ளிக்கூடங்கள்
மட்டுமல்லாமல், சங்கங்கள் / மன்றங்கள் / அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற கருத்துப் பரிமாற்றங்கள்
மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் பலப்பணிகளுக்கு மத்தியிலும் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பல உறுப்பினர்கள் கலந்துக்கொண்டது, இக்கூட்டம் சிறப்பாக
நடைபெற பெரும் உதவியாக இருந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். ஜசாக்கல்லாஹு
ஃகைரன்.
வல்ல ரஹ்மான் நம் எண்ணங்களைத் தூய்மையாக்கி நம்காரியங்களை வெற்றியாக்கி ஈருலகிலும் நம்யாவரையும் மேன்மைப்படுத்துவானாக, ஆமீன்.
வஸ்ஸலாம்.
தங்களன்புச் சகோதரன்,
எஸ்.கே. ஷமீமுல் இஸ்லாம்,
செயலாளர், KCGC.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|