காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் இம்மாதம் 27ஆம் நாளன்று, காயல்பட்டினத்தைச் சேர்ந்த - திருக்குர்ஆனை மனனம் செய்துள்ள ஹாஃபிழ்களுக்கான இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
இறையருளால், எமது காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் - வழமை போல இவ்வாண்டும் - இன்ஷாஅல்லாஹ் புனித ரமழான் பிறை 28 (27.07.2014) ஞாயிற்றுக்கிழமையன்று, மாலை 05.00 மணியளவில் குத்பா பெரிய பள்ளியில், ஹாஃபிழ்களுக்கான இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
திருமறை குர்ஆனை மனனம் செய்துள்ள ஹாஃபிழ்களை கண்ணியப்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஃபிழ்கள் அனைவரும் அவசியம் பங்கேற்க வருமாறும், காயல்பட்டினத்தின் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், தங்கள் பகுதியைச் சேர்ந்த ஹாஃபிழ்கள் அனைவரையும் அவசியம் பங்கேற்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நமதூர் பள்ளிவாசல்களில் நிர்வாகிகளாக சேவையாற்றி மறைந்த பெருமக்களுக்கும், மார்க்கச் சேவையாற்றி மறைந்த ஆலிம் பெருமக்களுக்கும் இந்நிகழ்ச்சியின்போது கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்படவுள்ளதால், ஹாஃபிழ்கள் குறித்த நேரத்தில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நம் யாவரின் நற்கருமங்களையும் ஏற்று, இப்புனித ரமழானின் பொருட்டால் ஈருலக வெற்றிகளை நிறைவாகத் தந்தருள்வானாக, ஆமீன். வஸ்ஸலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |