இம்மாதம் 27ஆம் நாளன்று நோன்புப் பெருநாள் எனவும், அன்று காலை 07.30 மணிக்கு காயல்பட்டினம் கடற்கரை திடலில் பெருநாள் தொழுகை நடைபெறுமெனவும், ஹிஜ்ரீ கமிட்டி காயல்பட்டினம் கிளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள பிரசுரம்:-
நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி:-
ஹிஜ்ரீ கமிட்டி சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) வெளியிடப்பட்ட நோன்புப் பெருநாள் அறிவிப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:...கடைசி வரிகள்..... posted bymackie noohuthambi (kayalpatnam)[25 July 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36108
எல்லாம் சரி, அந்த கடைசி வரிகள் இவர்களை சரிகாணாதவர்களை மட்டுமல்ல அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் கூட காயப்படுத்துகின்றன என்பது இவர்களுக்கு தெரியாமல் போனது எப்படி.
உங்கள் கொள்கையை சொல்லுங்கள் அதில் உறுதியாக இருங்கள். மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்று அல்லாஹ்வே அவன் திருமறையில் சொன்ன பிறகு ஏன் இந்த அர்ச்சனைகள், கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது . அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக உங்கள் பாவங்களை மன்னிப்பானாக,
2. அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழியை காட்டுவானாக! posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்)[25 July 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36109
அல்லாஹ்வின் தூதருக்கு மாற்றமாக, நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீத்களுக்கு, ஹதீத் கலை வல்லுனர்கள் கொடுத்த விளக்கங்களுக்கு மாற்றமாக, தப்பான அர்த்தம் தெரிவிக்கும் இந்த கூட்டத்திற்கு அல்லாஹ் தான் நேர்வழியை காட்ட வேண்டும்.
"27-07-2014 அன்று தான் ஈதுல் பித்ர் எனும் நோன்பு பெருநாள் தினம் என்பதற்கு பிறை அத்தாட்சிகள் சாட்சியாக உள்ளன" (C & P ) எந்த நபிமொழியை பின்பற்றி இதை அறிவித்தார்கள்? அது சரி, உலகில் உள்ள 'கணக்கிட்டு பிறையை சொல்லும்' மற்ற அமைப்புகள் வேறு ஒரு தேதியை அறிவித்துள்ளனரே? அப்போ உலகில் இவர்களை தவிர நோன்பு பிடித்த அனைவரும் ஹராமான செயல்களை செய்கின்றனரா?
விவாதம் செய்ய அழைத்தால், ஓடி ஒழியும் இந்த கூட்டத்தினர், இந்த மாதிரி நோட்டிஸ் விடுவதை விட்டு விட்டு, மார்க்க அறிஞர்கள், வானவியல் தெரிந்தவர்களை வைத்து பொது விவாதத்துக்கு ஏற்பாடு செய்து மக்களுக்கு தெளிவு ஏற்படுத்தினால், நன்றாக இருக்கும். அதற்கு ஏற்பாடு செய்வார்கள் என்று நம்பலாம்.
3. Re:...இவர்கள் வழி ... தனி வழி ... posted byA.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA)[26 July 2014] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36112
அல்லாஹு போது மாணவன் ....
இந்த உலகில் நமது இஸ்லாமியர்கள் அனைவர்களுக்கும் இதயமான புனித மக்காஹ் , நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் அடங்கியுள்ள புனித மதீனா , இந்த புனித தளங்களில் கூட பெருநாள் பிறையை கண்ணால் பார்த்து அதை மற்றவர்களும் உறுதி செய்த பின்னர் தான் , பெருநாள் என்று அதிகார பூர்வமாக , சவூதி அரசாங்கம் , சவூதி மன்னர் அலுவலகம் மூலம் அறிவிகிறார்கள் . இதை போல தான் மற்ற இஸ்லாமியர் நிறைந்த நாடுகளிலும் பெருநாளை அவர்கள் நாட்டில் பெருநாள் பிறையை கண்ணால் பார்த்த பிறகு அதிகார பூர்வமாக அறிவிக்கிறார்கள் ..
இது தான் , நமக்கு நமது உயிரிலும் மேலான கண்மணி நாயகம் காட்டி தந்த ... நமக்கு விட்டு சென்ற அழகான வழி முறை .. அதை தான் நாம் அந்த அந்த பகுதிகளில் நாம் அழகிய முறையில் பின்பற்றுகிறோம் . பெருநாளையும் முறைப்படி அந்த பகுதிகளில் பிறையை கண்னால் பார்த்த பிறகு உறுதி செய்கிறோம் .
ஆனால் இவர்களின் வழி .... இதை எல்லாம் விட்டு விலகி தனி வழியாக உள்ளது .... வல்ல நாயன் தான் நமக்குள் ஒற்றுமையை தர வேண்டும் .
இந்த வருடமும் நமது ஊரில் மூன்று பெருநாள்கள் நிச்சயம் ... மூன்று நாட்களும் தொடர்ந்து நமது ஊரின் கடற்கரையும் பெருநாள் மாலையில் கலை கட்டும் . பெருநாள் வியாபாரமும் நமது ஊரில் மூன்று நாட்கள் கலை கட்டும் ....
5. கொள்கை முக்கியம். இஸ்லாம்? posted byJaved Nazeem (Chennai)[26 July 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 36123
Transactional விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து objective ஐ மறந்து விடாதீர்கள் என்று எங்கள் President சொல்லுவார். ஒரு முஸ்லிம் உடைய objective சுவனத்தை அடைவது தான். ஆனால் அடிப்படையில் அக்கப்போர் புரிந்து ஆயிரத்தெட்டு பிரிவுகளாகக் பிரிந்து objective ஐ மறந்து விடுகிறோம்.
பிறை விஷயத்தில் பிடிவாதம் பிடிக்கும் அனைவருக்கும் ஒரு கேள்வி: மார்க்க விஷயத்தில் சரி என்று பட்ட எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் மாறு செய்ததில்லையா? ஆம் என்று சொன்னால் நீங்கள் இப்போது இருக்க வேண்டிய இடம் கஸ்ஸா.
ஹிஜ்ரி கமிட்டியினரின் நிலை, பிறை கணக்கீட்டில் சரியாகவே இருக்கலாம். ஆனால் நாங்களே அனைத்தையும் அறிந்தவர்கள், பிறை விஷயத்தில் நாம் பிடிவாதம் பிடித்தால் சொர்க்கம் சென்று விடலாம் என்பது போன்ற அவர்களின் செயல்பாடுகள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளன.
7. தூங்கியே தீருவோம்........ posted byAbdul Wahid .S (Kayalpatnam)[27 July 2014] IP: 223.*.*.* India | Comment Reference Number: 36131
எங்கள் முன்னோர்களுக்கு தெரியாததா உன்க்கு தெறிந்துவிடப்போகிறது என்பது போல சில கருத்துப்பதிவுகள் இடம் பெற்றுள்ளன. எல்லா நபிமார்களிடமும் கேட்க்கப்பட்ட கேள்விதான். அதனால் பிறை விசயமாக ஏற்கனவே சொல்லப்பட்டதற்கு அதிகம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பது பழமொழி. தூங்கியே தீரவேன்டும் என்று முடியுடன் இருப்பவர்களையும் எழுப்ப முடியாது என்பது புதுமொழி.
இப்போதைக்கு ஒன்று மட்டும் ஆணித்தரமாக சொல்லமுடிவது, தத்தம் பகுதியில் பிறை பார்க்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு இந்த வருடம் 29 நோன்புகள்தான். இன்ஷா அல்லஹ்.
8. Eid Mubarak. posted bySalai.Mohamed Mohideen (USA)[28 July 2014] IP: 207.*.*.* United States | Comment Reference Number: 36139
ஹிஜ்ரீ கமிட்டி யினரின் பிரசுரத்தில் ஏமாற்றத்தின் வெளிப்பாடை உணரமுடிகின்றது… அதே நேரத்தில் குறையேதும் இருப்பதாக தோன்றவில்லை. தான் பூண்ட / உணர்ந்த கொள்கையை வலியுறுத்துவதில் இது போன்ற அல்லது இதைவிட கடுமையான அச்சமூட்டி எச்சரிக்கும் (வாசகங்கள்) அமைத்து பொதுமக்களை அறிவுறுத்தும் வண்ணம் மற்ற கொள்கையினர் பிரசுரம் அடித்ததில்லை என்று நம்மால் சொல்ல முடியாது.
பொதுவாகவே நாம் சொல்லப்படும் விடயத்தை உற்று நோக்குவதில்லை. மாறாக (வெறும்) எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு விமர்சனம் செய்வதும் நய்யாண்டி செய்வதும் வழமையில் உள்ளதாகவே இருகின்றது. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர்… இது போன்று இரண்டு மூன்று பேராக இருந்தவர்கள் இன்று நமதூரில் சமபாதி (அல்லது அதற்கு குறைவான) கொள்கையினராக உருவெடுத்திருக்கின்றனர்.
பிறை விடயத்தில் மட்டும் சவுதியை அல்லது அரபுலகத்தை அளவுகோலாக / உதாரணாமாக எடுக்கும் நாம்... ஏன் அனைத்து மார்க்க விடயங்களுக்கும் அதையே அல்லது அவர்களின் செயல்பாட்டை ஒரு அளவுகோலாக எடுக்க விரும்புவதில்லை. மார்க்க விடயங்களுக்கு சவுதியை அல்லது அரபுலகத்தை அளவுகோலாக எடுக்கவேண்டும் என்று ஏதாவது மார்கத்தில் / சட்டம் இருக்கின்றதா என்று எனக்கு தெரியவில்லை. உலக + மார்க்க கல்வியையும் ஒருசேர கற்றறிந்த மார்க்க அறிஞர்கள் பேச்சாளர்கள் உலகளவில் / பல நாடுகளில் மிகுதியாகவே காணப்படுகின்றனர்.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் மார்க்க அறிஞர்கள் விஞானிகளின் உதவியுடன், இவர்களை போன்று 'கணக்கிடுதல்' முறையை பல வருட ஆய்வுக்கு உட்படுத்தி தகுந்த ஆதாரங்களுடன் அதனை பல இடங்களிலும் நடைமுறை படுத்தி வருகின்றனர். அதற்காக அவர்களை விமர்சனம் செய்யவோ அல்லது அவர்களை மார்க்க அறிஞர்களே இல்லையென்று எவராலும் சொல்லிவிட முடியாது.
நமதூரில் மூன்று பெருநாள் என்பது மனதிற்கு வலியையும் சலிப்பையும் தருகின்றது என்பதில் மாற்று கருத்தில்லை. அதே நேரத்தில் இவ்விடையத்தில் ஒற்ற கருத்து ஏற்படும் வரை… அது 'தத்தம்', கணக்கிடுதல் அல்லது சர்வதேச பிறையோ… எது சரி தவறு என்பதில் சொல்லப்படும் விடயத்தை உணர்ந்து அதனை நடைமுறை படுத்துவது அவரவர் விருப்பம். பிறரின் கருத்துக்கு உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது நம் கடமை.
தற்போது நான் சார்ந்துள்ள பள்ளியில் (பல நாட்டுகளை உள்ளடக்கிய) 'தத்தம் பிறையை' அடிப்படையாக கொண்டு நோன்பையும் பெருநாளையும் கொண்டாடிவருகின்றனர். தனிநபர் கருத்து வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்றாக நோன்பு பெருநாளை அனுஷ்டிக்கின்றனர். வட அமெரிக்காவில் 'கணக்கிடுதல்' முறையை & 'தத்தம் பிறையை' நடைமுறை படுத்துபவர்களுக்கும், இன்ஸா அல்லாஹ் ஒருசேர நாளை...திங்கள் கிழமை பெருநாள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross