காயல்பட்டினம் ஹிஜ்ரீ கமிட்டி சார்பில், ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இம்மாதம் 27ஆம் நாள் (இன்று) நோன்புப் பெருநாள் என்றும், அன்று காலையில், காயல்பட்டினம் கடற்கரை திடலில் பெருநாள் தொழுகை நடைபெறுமென்றும் காயல்பட்டினம் நகர ஹிஜ்ரீ கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், இன்று காலை 07.30 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது. ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர் ரஹ்மான் தொழுகையை வழிநடத்தினார்.
மேலப்பாளையத்தைச் சேர்ந்த மவ்லவீ அஹ்மத் உஸ்மானீ குத்பா பேருரையாற்றினார்.
நிகழ்வுகள் அனைத்திலும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த சுமார் 103 ஆண்கள்; 69 பெண்கள் என மொத்தமத் 172 பேர் கலந்துகொண்டதாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். குத்பா பேருரை நிறைவுற்றதையடுத்து, அவர்கள் தமக்கிடையில் கட்டித்தழுவி, கைலாகு செய்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
ஏற்பாடுகளை, ஹிஜ்ரீ கமிட்டி காயல்பட்டினம் கிளை அங்கத்தினர் செய்திருந்தனர்.
ஹிஜ்ரீ கமிட்டி காயல்பட்டினம் கிளை சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹிஜ்ரீ கமிட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 23:26 / 27.07.2014] |