கிறிஸ்துவ மத போதகராக இருந்து, சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய மார்க்கத்தைத் தன் வாழ்வியல் நெறியாக்கிக் கொண்டு, தற்போது இஸ்லாமிய அழைப்பாளராக இயங்கிக் கொண்டிருக்கும் - கன்னியாகுமரி மாவட்டம் இணையம் ஊரைச் சேர்ந்த எம்.சி.முஹம்மத், நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு காயல்பட்டினத்திலுள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்புரையாற்றி வருகிறார்.
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் நேற்று (ஜூலை 24) தராவீஹ் தொழுகை நிறைவுற்ற பின்னர் அவர் சிறப்புரையாற்றினார்.
திருமறை குர்ஆனை பொருள் விளங்கிப் படிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார். முன்னதாக, மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ - அவரைப் பற்றி அறிமுகவுரையாற்றினார்.
குருவித்துறைப் பள்ளி தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ தலைமையிலும், அதன் செயலாளர் எஸ்.எம்.கபீர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்தோர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நடப்பு ரமழானில், இந்நிகழ்ச்சிக்கு முன்பாக, காட்டு மகுதூம் பள்ளி, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி, ஜாவியா அரபிக்கல்லூரி, ஆறாம்பள்ளி உள்ளிட்ட இடங்களிலும் அவர் சிறப்புரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |