பாலஸ்தீன் நாட்டில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால், அங்குள்ள பச்சிளங்குழந்தைகள், பெண்கள், முதியோர் என பொதுமக்கள் பெருமளவில் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். பாலஸ்தீனத்தின் காஸா பகுதி முழுக்க இரத்தக்களறியாகக் காட்சியளிக்கிறது.
பாலஸ்தீன நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகவும், உயிர்நீத்தோரின் மறுமை நல்வாழ்விற்காகவும், காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஜதீத் - புதுப்பள்ளியில் இம்மாதம் 21ஆம் நாள் இரவு தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து சிறப்புப் பிரார்த்தனை அமர்வு நடைபெற்றது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ - பாலஸ்தீன நாட்டில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களால் உண்டான பாதிப்புகளை விளக்கி உரையாற்றியதுடன், அங்குள்ள மக்கள் நலனுக்காகவும், மரணித்தவர்களின் மறுமை நல்வாழ்விற்காகவும் பிரார்த்தனை செய்தார்.
இந்நிகழ்ச்சியில், புதுப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்தோர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
A.S.அஷ்ரஃப்
புதுப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |