காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் ஆண்டுதோறும் ரமழான் மாதங்களில் ஒவ்வொரு நாள் இரவிலும், இரவுத் தொழுகை நடத்தப்படுவது வழமை.
4 ஸலாம்களைக் கொண்ட இத்தொழுகையில், ஒரு ஸலாமுக்கு கால் ஜுஸ்உ வீதம் ஒரு நாளைக்கு ஒரு ஜுஸ்உ என ரமழான் நிறைவில் திருமறை குர்ஆன் முழுமையாக ஓதி முடிக்கப்படுகிறது.
இரவுத் தொழுகையை அல்ஜாமிஉல் அஸ்ஹர் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் அல்மத்ரஸத்துல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பயிலகத்தின் மாணவர்களே பெரும்பாலும் வழிநடத்தி வருகின்றனர். அவ்வப்போது இதர ஹாஃபிழ்களும் தொழுகையை வழிநடத்துவதுண்டு.
நடப்பாண்டு ரமழான் இரவுத் தொழுகையை வழிநடத்திய ஹாஃபிழ் மாணவர்களுக்கு, இன்று ஜும்ஆ தொழுகை நிறைவுற்ற பின்னர் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. மத்ரஸத்துல் அஸ்ஹர் ஆசிரியர் ஹாஃபிழ் செய்யித் முஹம்மத் மாணவர்களின் பெயர்களை வாசிக்க, தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இவ்வாண்டு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் ரமழான் இரவுத் தொழுகையை வழிநடத்தி, ஊக்கப்பரிசு பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் வருமாறு:-
(01) கவ்து சுவைலிம்
(02) அஹ்மத் பஷீர்
(03) முஹம்மத் நூஹ்
(04) ஜியாஉல் அமீன்
(05) இஸ்மாஈல்
(06) அஸ்லம்
(07) ஸதக்கத்துல்லாஹ் மக்கீ
(08) முஹம்மத் உஸாமா
(09) நூஹ் நுஃபைஸ்
(10) நூஹ் ஸப்ரீ
(11) ஹாரிஸ்
(12) யாஸிர்
(13) அஹ்மத் அலீ
(14) அஹ்மத் அம்மார்
(15) கிஸார்
(16) அனஸ் இஸ்மாஈல்
(17) முஹம்மத் ஹனீஃபா
(18) ரோஷன் அஷ்ரஃப்
(19) ஃபர்ஹான்
(20) சுல்தான் ஆரிஃப்
(21) லரீஃப்
(22) ஆதில் ஹமீத்
(23) ரஜீன்
(24) முஜாஹித்
(25) லரீஃப்
(26) ஷேக் ஸிர்ஜூன்
(27) ஹமீத் அப்துல்லாஹ்
(28) இஃப்திகார்
(29) சாஃபாஸ்
(30) நஸீம்
(31) முஃபீத்
(32) லத்தீஃப்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளியின் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் ஒருங்கிணைப்பில், முஅத்தின் ஏ.எச்.லுக்மான் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
தகவல்:
குளம் K.S.முஹம்மத் யூனுஸ்
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) இரவுத் தொழுகை நடத்திய மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கிய தகவல்கள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |