காயல்பட்டினத்தின் பெரும்பாலான பள்ளிவாசல்களில், ரமழான் மாத இரவுகளில் நடைபெறும் தராவீஹ் சிறப்புத் தொழுகையின்போது திருமறை குர்ஆனின் வசனங்கள் பகுதி பகுதியாக ஓதப்பபடும். ரமழான் இறுதி நாட்களில் முழுமையாக ஓதி முடிக்கப்பட்டு தமாம் (நிறைவு) செய்யப்படும்.
இந்நிகழ்வையொட்டி, நகரின் பல பள்ளிவாசல்களில், மறுநாள் அதிகாலையில் தமாம் சாப்பாடு என்ற பெயரில் ஸஹர் உணவு விருந்துபசரிப்பு - மஹல்லா ஜமாஅத் வாசிகளுக்காக செய்யப்படும்.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் கோமான் தெருக்களை உள்ளடக்கிய கோமான் மொட்டையார் பள்ளியில் இன்று (ஜூலை 26) ஸஹர் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிகாலை 02.30 மணிக்குத் துவங்கிய ஸஹர் உணவு விருந்துபசரிப்பில், அப்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த சுமார் 200 ஆண்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அவர்களுக்கு காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி களறி சாப்பாடு பரிமாறப்பட்டது.
ரமழான் 27ஆம் நாளை முன்னிட்டு, கோமான் மொட்டையார் பள்ளி வண்ணச்சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கோமான் ஜமாஅத் சார்பில் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ரமழான் 27ஆம் நாளன்று நடத்தப்பட்ட ஸஹர் விருந்துபசரிப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கோமான் மொட்டையார் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |