காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில், நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, திருமறை குர்ஆனை தஜ்வீதுடன் ஓதும் போட்டி, இஸ்லாமிய மார்க்கம் சார்ந்த வினா-விடை போட்டி ஆகிய போட்டிகள், 12 நாட்களாக காலை 11.15 மணி முதல் 12.15 மணி வரை அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்றது.
ஐ.ஐ.எம். தொலைக்காட்சியில், தொலைபேசி வழியே நடத்தப்பட்ட இப்போட்டியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமியர் என சுமார் 140 பேர் பங்கேற்றனர். அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் நூஹ் அல்தாஃபீ, அதன் ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.எம்.பி.செய்யித் முஹம்மத் ஆகியோரிணைந்து போட்டிகளை நடத்தினர்.
நிறைவு நாள் போட்டிகள் இம்மாதம் 24ஆம் நாள் வியாழக்கிழமை (நேற்று) நடைபெற்றது. நிறைவில், வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றோர் விபரம் வருமாறு:-
(01) நஜ்முன்னிஸா, அலியார் தெரு
(02) எஸ்.ஏ.எம்.அப்துல் பாஸித், கி.மு.கச்சேரி தெரு
(03) கதீஜா, சொளுக்கார் தெரு
(04) ஆஃபியா, கே.டி.எம். தெரு
(05) ரஷீதா, தீவுத் தெரு
(06) உம்முஹானீ, அலியார் தெரு
(07) ஃபஹ்மிதா, கே.டி.எம். தெரு
(08) ஜாஹிதா, சேதுராஜா தெரு
(09) ஃபாத்திமா, கடற்கரை சாலை
(10) ஃபாத்திமா, சித்தன் தெரு
(11) ரஷீதா, அலியார் தெரு
பரிசுகளை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் மூத்த உறுப்பினர்களான தம்மாம் ரஃபீக், தம்மாம் இம்தியாஸ், தம்மாம் கே.டி.பாதுல் அஸ்ஹப், என்.கே.செய்யித் அபூபக்கர் ஆகியோர் வழங்கினர்.
குளம் கே.எஸ்.முஹம்மத் யூனுஸ் பரிசளிப்பு நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். போட்டிகளை நடத்தியோருக்கும், ஒளிப்பதிவுப் பணிகளைச் செய்த எம்.ஏ.அப்துல் ஜப்பார், எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் ஆகியோருக்கும் இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இறுதி நாள் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.
தகவல்:
M.A.அப்துல் ஜப்பார்
மற்றும்
குளம் K.S.முஹம்மத் யூனுஸ்
ஐ.ஐ.எம். தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |