எளியவர்களுக்கு உதவிட ஜகாத் - சதகா நிதிகளை வழங்கிட KCGC அமைப்பு சென்னை வாழ் காயலர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
“ஜகாத் கொடுங்கள், சதகா செய்யுங்கள்”
புனித ரமளானின் பொற்காலத்தை இறை உவப்பையும் மறுமை வெற்றியையும் பெறும் பொருட்டு நிறைவாகப் பயன்படுத்தி அந்த வல்லோனின் நல்லருளை பெற்று, கருணையுள்ள ரஹ்மான் நம் யாவருக்கும் உதவி செய்வானாக! ஆமீன்.
அல்லாஹ் கூறுகிறான் : (நபியே) அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.” (அல்குர்ஆன் : 02:215)
அன்பிற்குரிய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) சார்பாக ஆண்டுதோறும் புனித ரமளான் மாதத்தில் ஜகாத் மற்றும் சதகாக்களை சென்னை வாழ் காயலர்களிடமிருந்து வசூல் செய்து, நமதூரில் கல்வி, மருத்துவம் மற்றும் இறைப்பணிக்காக செயல்பட்டு வரும் அமைப்புகளுக்கு வழங்கி வருகின்றோம்.
கடந்த 2013 ஆம் ஆண்டு புனித ரமலான் மாதத்தில் நமது KCGC அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களிடமிருந்து மட்டும் ஜகாத் வகைக்காக ரூபாய் ஒரு இலட்சத்தி முப்பத்தி ஆறாயிரம் (Rs.1,36,000) வரை வசூலிக்கப்பட்டு நகரில் கல்வி, மருத்துவம், மற்றும் இறைப்பணிக்காக செயல்பட்டு வரும் அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
அதனடிப்படையில் இன்ஷாஅல்லாஹ் இவ்வருடமும் ஜகாத் மற்றும் சதகா தொகைகளை வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நற்பணியை தொடர்ந்திட, இறைப்பணியில் உங்களது உதவியும், பங்களிப்பும் இடம்பெரும் வகையில் உங்களது ஜகாத், சதகா மற்றும் நன்கொடைகளை வழங்கி எல்லாம் வல்ல இறைவனின் அருள்பெற வேண்டுகிறோம்.
நாம் பிறந்த ஊருக்கும், நமது சொந்தங்களுக்கும் நம்மால் முடிந்த உதவிகளையும், வழிகாட்டல்களையும் செய்து வர வல்ல அல்லாஹ் நம்மவர்களுக்கு நல்லருளை தருவானாக ஆமின்.
உளத்தூய்மையுடன் இறைத்திருப்தியையும் மறுமை இலக்கையும் மட்டுமே எதிர்பார்ப்பாகக் கொண்டு செயலாற்றிட வல்ல ரஹ்மான் நம் எண்ணங்களைத் தூய்மையாக்கி நம்காரியங்களை வெற்றியாக்கி ஈருலகிலும் நம்யாவரையும் மேன்மைப்படுத்துவானாக, ஆமீன். வஸ்ஸலாம்...
தங்களன்புச் சகோதரன்,
எஸ்.கே. ஷமீமுல் இஸ்லாம்,
செயலாளர், KCGC.
குறிப்பு: இதுவரை சுமார் ரூ.80,000 (ரூபாய் எண்பதாயிரம்) வசூலாகிவுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! மேலும் ஜகாத், சதகா மற்றும் நன்கொடைகளை கொடுக்க விரும்பும் சகோதரர்கள் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை (27.07.2014)-க்குள் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். வஸ்ஸலாம்...
Mobile : +91-87544 09169
Email id : Kcgc.ao@gmail.com
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|