காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் சார்பில், இம்மாதம் 24ஆம் நாள் வியாழக்கிழமை மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ நிகழச்சிக்குத் தலைமை தாங்கினார். குருவித்துறைப் பள்ளி தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், வாவு எஸ்.அப்துல் கஃப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் ஹாஃபிழ் பி.ஏ.முஹம்மத் உக்காஷா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். அல்தாஃப் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
என்.டி.ஷெய்கு மொகுதூம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மத்ரஸா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி (தீனிய்யாத்), ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா ஆகிய கல்விப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து அவர் தனதுரையில் சுருக்கமாக விளக்கிப் பேசினார்.
ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீயில் நடைபெற்ற திருக்குர்ஆன் மனனப் போட்டியில், ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவில் பயின்ற மாணவர் ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ முதற்பரிசு பெற்ற தகவலை நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்ட அவர், மத்ரஸாவில் பயின்ற காலத்தில் அம்மாணவரின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கியதோடு, அபூதபீ ஹிஃப்ழுப் போட்டியில் முதலிடம் பெற்றமைக்காக மத்ரஸாவின் சார்பில் மனதார வாழ்த்திப் பிரார்த்திப்பதாகக் கூறினார்.
எம்.இ.எல்.நுஸ்கீ நன்றி கூற, துஆவுடன் மேடை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
பின்னர் துவங்கிய இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், குளிர்பானம், பழ வகைகள் துவக்கமாகப் பரிமாறப்பட்டன.
மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. தொழுகையைத் தொடர்ந்து சிற்றுண்டியுபசரிப்பு நடைபெற்றது. அனைவருக்கும் பிரியாணி கஞ்சி, பனிக்கூழ், சிக்கன் 65, மட்டன் கட்லெட், வடை வகைகள், இஞ்சி கலந்த தேனீர் ஆகியன பரிமாறப்பட்டன.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் - முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, குருவித்துறைப் பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ, மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிழுறு முஹம்மத் ஃபாஸீ, மவ்லவீ எஸ்.எச்.முர்ஷித் ஃபாஸீ, இஸ்லாமிய அழைப்பாளர் எம்.சி.முஹம்மத் உள்ளிட்ட மார்க்க அறிஞர்களும்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், அதன் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்,
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், துணைச் செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், என்.எஸ்.நூஹ் ஹமீத், ஹாஜி எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப், குருவித்துறைப் பள்ளி செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.இஸ்மாஈல், தாயிம்பள்ளி - சீதக்காதி நினைவு நூலகத்தின் தலைவர் எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி,
நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டி.எம்.), ஹாஜி டி.எம்.ரஹ்மத்துல்லாஹ், புதுப்பள்ளி துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல், அரிமா சங்க நகர நிர்வாகி ஏ.கே.பீர் முஹம்மத், ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ரியாத் காயல் நல மன்ற நிர்வாகி நஈமுல்லாஹ், லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன் உட்பட நகரின் பெரும்பாலான ஜமாஅத் நிர்வாகிகளும், நகரப் பிரமுகர்களும், பொதுமக்களும், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் இந்நாள் - முன்னாள் மாணவர்களும் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நோன்பு துறந்தபோது...
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ, என்.டி.ஷெய்க் மொகுதூம், ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.ஷெய்கு அப்துல் காதிர், உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
ஹாமிதிய்யா நிர்வாகத்தின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாமிதிய்யா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |