இந்திய ஹஜ் குழு மூலம் இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பம் செய்த பலர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அவர்களில் பலருக்கு - கடந்த சில மாதங்களாக, வெவ்வேறு தருணங்களில், இடம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஹஜ் குழு தற்போது மேலும் சில இடங்களை - காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒதுக்கியுள்ளது. அதன்படி தமிழக விண்ணப்பதாரர்கள் 69 பேருக்கு (காத்திருப்போர் பட்டியலில் 139 வது இடம் முதல் 207 வது இடம் வரை) இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் - ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் மீதி தொகையை செலுத்தி, தங்கள் பாஸ்போர்ட்டினை மாநில ஹஜ் குழுவிடம் சமர்பிக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross