| 
 காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்க நிர்வாகத்தின் சார்பில், சங்க வளாகத்தில் நேற்று (ஜூலை 26) இரவில் ஸஹர் உணவு - களறி சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
  
இதுகுறித்து முன்னதாகவே பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், ரூபாய் 600 செலுத்தி, அப்பா பள்ளி - மரைக்கார் பள்ளி ஜமாஅத்துகளைச் சேர்ந்த குடும்பத்தினர் ஸஹர் சாப்பாட்டிற்கு முன்பதிவு செய்திருந்தனர். நேற்றிரவு 11.00 மணி முதல் ஸஹர் சாப்பாடு வினியோகம் செய்யப்பட்டது. 
  
ஒரு தாளத்தில் (அகன்ற தட்டு) 3 சிட்டி (கிண்ணம்) கிடா இறைச்சி, கத்திரிக்காய் பருப்பு, புளியானம் (ரசம்), சோறு ஆகியன உள்ளடக்கம். 
  
 
  
 
  
 
  
 
  
ஸஹர் சாப்பாட்டு ஏற்பாடுகளை, ரெட் ஸ்டார் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட அங்கத்தினர் செய்திருந்தனர். 
  
தகவல் & படங்கள்:  
M.F.முஹம்மத் ஸாலிஹ்
  
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ரெட் ஸ்டார் சங்கத்தின் ஸஹர் சாப்பாடு வினியோகம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
  
ரெட் ஸ்டார் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!  |