செய்தி: ரமழான் 1435: புதுப்பள்ளியில் தராவீஹ் தொழுவித்த ஹாஃபிழ்களுக்கு சங்கை செய்யும் நிகழ்ச்சி! மஹல்லாவாசிகள் திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மார்க்க அறிஞர்களை மேன்மைபடுத்தும் செயல் நம் ஊரில் ஒவ்வொரு பள்ளிகளிலும் பிரபலமாக நடத்தப்படவேண்டும்! posted byமுஹம்மது ஆஅதம் சுல்தான்! (yanbu)[26 July 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36125
அரசியல் கட்சி தலைவர்களையும் ,அரசியல் வாதிகளையும் ஆஹா.ஓஹோ வென்று புகழ்பாடி பெருமைப்படித்திக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நம் புனித மார்க்க இறைமறை மனண வித்தகர்களை அவர்களின் இறை வழிபாட்டுச் சேவையைப் பாராட்டி பெருமைப்படுத்துவதென்பது நம் எல்லோருக்கும் மனமகிழ்வை கொடுப்பதென்பது மட்டுமல்ல,அந் இறைமறையை இறக்கிய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கும் ஏற்ற இனியதொரு சங்கைமிகு செயலாகும்!
பலமதத்தினரை அழைத்து இஃப்தார் கொடுக்கும் நிகழ்வைவிட எம் மார்க்க அறிஞர்களை மேன்மைபடுத்தும் மாண்புக்குறிய செயல் நம் ஊரில் ஒவ்வொரு பள்ளிகளிலும் பிரபலமாக நடத்தப்படவேண்டும்!
புதுப்பள்ளி ஜமாத்தினருக்கு என் இதயம் நிறைத்த வாழ்த்துக்களைத்தெரிவித்து, இறைமறையை ஓதுவோரின் உள்ளம் மகிழச்செய்த உங்கள் அனைவர்களையும் வல்ல அல்லாஹ் வாழிவின் உயரே உயர்த்திப்பிடித்து எல்லா நலன்களையும்,வளங்களையும் வழங்கிடுவானாக ஆமீன்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross