Eid Mubarak. posted bySalai.Mohamed Mohideen (USA)[28 July 2014] IP: 207.*.*.* United States | Comment Reference Number: 36139
ஹிஜ்ரீ கமிட்டி யினரின் பிரசுரத்தில் ஏமாற்றத்தின் வெளிப்பாடை உணரமுடிகின்றது… அதே நேரத்தில் குறையேதும் இருப்பதாக தோன்றவில்லை. தான் பூண்ட / உணர்ந்த கொள்கையை வலியுறுத்துவதில் இது போன்ற அல்லது இதைவிட கடுமையான அச்சமூட்டி எச்சரிக்கும் (வாசகங்கள்) அமைத்து பொதுமக்களை அறிவுறுத்தும் வண்ணம் மற்ற கொள்கையினர் பிரசுரம் அடித்ததில்லை என்று நம்மால் சொல்ல முடியாது.
பொதுவாகவே நாம் சொல்லப்படும் விடயத்தை உற்று நோக்குவதில்லை. மாறாக (வெறும்) எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு விமர்சனம் செய்வதும் நய்யாண்டி செய்வதும் வழமையில் உள்ளதாகவே இருகின்றது. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர்… இது போன்று இரண்டு மூன்று பேராக இருந்தவர்கள் இன்று நமதூரில் சமபாதி (அல்லது அதற்கு குறைவான) கொள்கையினராக உருவெடுத்திருக்கின்றனர்.
பிறை விடயத்தில் மட்டும் சவுதியை அல்லது அரபுலகத்தை அளவுகோலாக / உதாரணாமாக எடுக்கும் நாம்... ஏன் அனைத்து மார்க்க விடயங்களுக்கும் அதையே அல்லது அவர்களின் செயல்பாட்டை ஒரு அளவுகோலாக எடுக்க விரும்புவதில்லை. மார்க்க விடயங்களுக்கு சவுதியை அல்லது அரபுலகத்தை அளவுகோலாக எடுக்கவேண்டும் என்று ஏதாவது மார்கத்தில் / சட்டம் இருக்கின்றதா என்று எனக்கு தெரியவில்லை. உலக + மார்க்க கல்வியையும் ஒருசேர கற்றறிந்த மார்க்க அறிஞர்கள் பேச்சாளர்கள் உலகளவில் / பல நாடுகளில் மிகுதியாகவே காணப்படுகின்றனர்.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் மார்க்க அறிஞர்கள் விஞானிகளின் உதவியுடன், இவர்களை போன்று 'கணக்கிடுதல்' முறையை பல வருட ஆய்வுக்கு உட்படுத்தி தகுந்த ஆதாரங்களுடன் அதனை பல இடங்களிலும் நடைமுறை படுத்தி வருகின்றனர். அதற்காக அவர்களை விமர்சனம் செய்யவோ அல்லது அவர்களை மார்க்க அறிஞர்களே இல்லையென்று எவராலும் சொல்லிவிட முடியாது.
நமதூரில் மூன்று பெருநாள் என்பது மனதிற்கு வலியையும் சலிப்பையும் தருகின்றது என்பதில் மாற்று கருத்தில்லை. அதே நேரத்தில் இவ்விடையத்தில் ஒற்ற கருத்து ஏற்படும் வரை… அது 'தத்தம்', கணக்கிடுதல் அல்லது சர்வதேச பிறையோ… எது சரி தவறு என்பதில் சொல்லப்படும் விடயத்தை உணர்ந்து அதனை நடைமுறை படுத்துவது அவரவர் விருப்பம். பிறரின் கருத்துக்கு உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது நம் கடமை.
தற்போது நான் சார்ந்துள்ள பள்ளியில் (பல நாட்டுகளை உள்ளடக்கிய) 'தத்தம் பிறையை' அடிப்படையாக கொண்டு நோன்பையும் பெருநாளையும் கொண்டாடிவருகின்றனர். தனிநபர் கருத்து வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்றாக நோன்பு பெருநாளை அனுஷ்டிக்கின்றனர். வட அமெரிக்காவில் 'கணக்கிடுதல்' முறையை & 'தத்தம் பிறையை' நடைமுறை படுத்துபவர்களுக்கும், இன்ஸா அல்லாஹ் ஒருசேர நாளை...திங்கள் கிழமை பெருநாள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross