செய்தி: நோன்புப் பெருநாள் 1435: காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் இன்று நோன்புப் பெருநாள் தொழுகை! பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..கடைகளில் வாங்க முடியுமா.... posted bymackie noohuthambi (kayalpatnam)[29 July 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36145
அது ஊரிலே பெரிய சூப்பர் மார்கெட். கூட்டம் நிறைந்து வழிகிறது. ஒரு மெல்லிசை பாடல் ஒன்று ஒலிக்கிறது, அது காற்றில் மிதந்து வருகிறது.
ஆண்டவன் ஒரு நாள் கடை விரித்தான்
அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
அவரவர் தேவைக்கு வாங்க சொன்னான்
அவரவர் வசதிக்கு வாங்க சொன்னான்
பெண்களோ அழகை வாங்க வந்தார்
ஆண்களோ புகழை வாங்க வந்தார்
இதயம் என்பதை விலையாய் கொடுத்து
அன்பை வாங்கிட எவருமில்லை.
உண்மைதான். இந்த பெருநாள் நிலையும் அதுதான். அந்த சூப்பர் மார்க்கெட்டில் எல்லாம் இருக்கிறது. ஒரு கிலோ சந்தோஷம் தாருங்கள், ஒரு கிலோ இன்பம் தாருங்கள், அரை கிலோ நிம்மதி தாருங்கள் என்று யாராவது கேட்டு அதற்கான விலையை கொடுத்து வாங்க முடியுமா. அந்த சந்தோஷம், இன்பம், நிம்மதி எல்லாம் இப்படி கூடி கொண்டாடுவதில்தான் இருக்கிறது என்பதை அனுபவிக்கிறவர்கள்தான் உணர்வார்கள். இன்று பள்ளிவாசல்களில் சுற்றி திரிந்து சொந்த பந்தங்களை ஆர தழுவி முசாபஹா செய்து அன்பையும் பாசத்தையும் பரிமாறிக் கொள்ள நமக்கு வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
மூன்று வெவ்வேறு தினங்களில் வாப்பா ஒருநாள், மகன் ஒருநாள், மருமகன் ஒருநாள் என்று பெருநாள்கள் ஆகிப் போன இந்த நாளில் அவர்கள் தனிமையில் இருந்து படும் பாடு அந்த அல்லாஹ் ஒருவனே அறிவான். அறிவியல் வளர்ந்தது ஆனால் மனித நேயம் வீழ்ந்தது.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதெல்லாம் வெறும் பாடல்களாக பொய்த்துப் போய்விட்டன என்பதுதான் அந்த சூப்பர் மார்க்கெட் மெல்லிசை எனக்கு உணர்த்தியது.
ஈகை பெருநாள் சிந்தனைகள், சந்தோசங்கள் கவலைகள் எல்லாவற்றையும் அசைபோட்டவனாக அங்கிருந்து வீடு திரும்பியபோது அல்லாஹ்வின் அருள் மறை வசனம் என்னை அமைதி படுத்தியது..
.ALAA BI THIKRILLAAHI THATHMAYINNUL QULOOB.........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross