செய்தி: நோன்புப் பெருநாள் 1435: இன்று நோன்புப் பெருநாள் இரவு! நாளை காலை 07.15 மணிக்கு கடற்கரையில் பெருநாள் தொழுகை!! அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பிறையை பார்த்தவர்களை பொய்யர்களாக ஆக்காதீர்கள் posted byசாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்)[30 July 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36153
சகோதரர் பாளையம் சதக்கத்துல்லாஹ் அவர்களின் கருத்தை பார்த்தால், பிஜி மற்றும் சில கீழ்த்திசை நாடுகளில் பிறையை பார்த்து அந்தந்த நாடுகளில் பெருநாள் அறிவித்தது ஆதராபூர்வமான தகவல் இல்லையா? செய்த தவறை மறைக்க, பிறையை கண்ணால் பார்த்தவர்களை பொய்யர்களாக ஆக்காதீர்கள்.
"சவுதி அறிவித்தால் அதற்கு மாற்றமாகத்தான் நோன்பு வைப்போம், பெருநாள் கொண்டாடுவோம் என்று நீங்கள் அறிவித்து விட்டு போக வேண்டியதுதானே?" (C&P)
'உலகில் எங்கு பிறை தென்பட்டாலும் நோன்பு மற்றும் பெருநாள் அனுஷ்டிப்போம் என்ற கொள்கையில் உள்ளவர்கள் நாங்கள் இல்லை'. அந்தந்த பகுதியில் பிறை பார்த்து நோன்பு & பெருநாளை அனுஷ்டிப்பவர்கள். இவர்கள் தான் உலகில் எங்கு பிறை தென்பட்டாலும் ஏற்றுக் கொள்வோம் என்று அறிவித்துவிட்டு சஊதியை மட்டும் பின்பற்றுகின்றனர்.
பிறையில் சஊதியை ஆதாரப்பூர்வமானதாக ஏற்று கொண்டவர்கள், 2004 அல்லது 2005 -ம் ஆண்டு ஹஜ்ஜு பெருநாள் என்று அறிவித்த பின்னர் 3-4 நாட்கள் கழித்து பெருநாள் தினத்தை மாற்றினார்கள்.
அதே போல், முஹர்ரம் (1433) மாதம் என்று துவங்குகிறது? News ID # 7672 என்ற செய்திக்கு மக்கி நூஹு தம்பி காக்கா பதிந்த கருத்து, "சவுதி அரேபியா 10 நாளைக்கு பிறகு நாங்கள் கண்ட பிறை தப்பா போய்விட்டது என்று சமீபத்தில் சர்வதேச பிறையை நம்பி நோன்பு பிடித்தவர்களை கதி கலங்க செய்தார்கள்". கருத்து# 14294.
அந்த வருட ஆஷுரா நோன்பு பற்றிய இந்த நிவாகத்தின் "டிசம்பர் 05, 06 (திங்கள், செவ்வாய்) தேதிகள் முஹர்ரம் 09ஆம், 10ஆம் நாட்கள் என்றும், அந்நாளில் ஆஷூறா நோன்பு நோற்கப்பட வேண்டும் என்றும் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது". News ID # 7658
இந்த இரு நிகழ்வுகளும் ரமலானை சார்ந்த நோன்பு & பெருநாள் இல்லை. அதனால் தப்பித்தது. ரமலானை சார்ந்ததாக இருந்திதிருந்தால், முடிந்து போன அமல்களின் நிலை என்ன?
இந்த இரு நிகழ்வுகளிலும் சவூதி முதலில் அறிவித்தது, ஆதாரப்பூர்வமானதுதானா? முதலில் அறிவித்தது ஆதாரப்பூர்வமானது என்றால், ஏன் மாற்றினார்கள்? அதை பின்பற்றி இந்த நிர்வாகமும் மாற்றியதே?
நாங்கள் சவுதியை மட்டும் தான் பின்பற்றுவோம், மற்ற எந்த நாட்டையும் பின்பற்ற மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவியுங்கள். அப்படி அறிவித்தால், இவர்களின் கொள்கை இதுதான் என்று யாரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross