செய்தி: ஜன்சேவா சார்பில் ஈத் மிலன் - பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி! வெளிநாடு - வெளியூர் வாழ் காயலர்கள் 125 பேர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஹம்திலில்லஹ் மிக அருமையானதிட்டம்! . posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[05 August 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36239
ஹம்திலில்லஹ் மிக அருமையானதிட்டம்! நல்ல முறையில் வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வர வல்ல அல்லாஹ்வை வேண்டிக்கொள்வோமாக!
கடந்த சுமார் இருபது வருடங்களுக்குமுன்னால் ரியாத் காயல்நல மன்றத்தாரால் இப்படி ஒரு வட்டில்ல்லா உதவி திட்டத்தை கொண்டுவந்து நம்மூரில் வட்டியில் விழுந்து தம் வாழ்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்களை சற்று கைதூக்கி விட இத் திட்டம் பயன்படும் என்ற நோக்கத்தோடு அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் குறைந்தது பத்தாயிரம் ரூபாயை முதலீட்டு உதவியாக செலுத்தவேண்டும் என்று முடிவெடுத்து அனைவர்களின் சம்மதத்தையும் பெற்றோம். அனைவர்களும் தரவும் தயாராகினர்!
செயலாக்கும் திட்டத்தை வகுக்கும்பொழுது அதில் பல சிக்கல்களை சந்திக்க நேரிட்டது,பல ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்து கொண்டு பெரிய தொகையை பராமரிப்பது சற்று கடினமாக இருந்ததால் அந்த நல்ல உதவித்திட்ட்டம் கை கூடாமல் போய்விட்டது.
ஏழ்மையின் பளுவை நம்மால் இயன்ற வரை குறைக்க செய்கின்ற இத்திட்டத்திற்கு வசதிபடைத்தவர்கள் முதல் தங்களால் குறைந்தபட்சம் உதவித்தொகை முதலீட்டார்கள் வரை முதலீடு செய்து ஒத்துழைக்க வேண்டும்!.
எத்தனையோ குடும்பங்கள் அடுத்தவர்களிடம் உதவிக் கேட்பதை தவித்து தங்கள் குடும்ப மானம்,கௌரவம்
காப்பாற்ற பட வேண்டுமே என்ற தன்மானத்தில் வட்டியில் போய் விழுகிறார்கள்.அந்த வட்டி கொஞ்சம் கொஞ்சமாக கேன்சரைவிட வேகமாக தம் முதலீட்டையே அரித்தெடுத்ததோடல்லாமல் வட்டியினாலையே தம் வாழ்க்கை மூழ்கிவிடக்கூடிய அபாயத்தின் எல்லைக் கோட்டில் இருப்பது எல்லோர்கண்களுக்கும் தெரியாத ஒரு பரிதாப பிம்பமாகும்!
புண்ணிய நோக்கத்தை குறிக்கோளாக கொண்டு இயங்க இருக்கின்ற இந்த நல்லதிட்டம் எந்த நெருக்கடியும் இல்லாமல் நடந்திட அதனால் பல வரியவர்கள் பயன்பெற, கண்ணியமிகு காயலின் நற்பெயரும் நம் வட்டார முஸ்லிம் ஊர்களால் போற்றி புகழ்ந்திட அவர்களின் ஊர்களிலும் இப்புண்ணியபணி பறந்து தழைத்திட எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்திடுவானாக ஆமீன்!
நாம் ஒருவருக்கு ஒரு உதவி செய்தால் இறவன் நமக்கு
பத்துபேர்களை உதவி செய்ய ஏவுவான் என்பது இறைமொழி. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross