செய்தி: காயல்பட்டினம் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் எஸ்.செய்யித் அஹ்மத் (எ) DMK செய்யித் அஹ்மத் காலமானார்! 19.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சட்டமன்றம் செல்லாத நிரந்தர MLA posted bymackie noohuthambi (kayalpatnam)[05 August 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36242
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
நமதூருக்கென்று ஒரு பெருமை உண்டு.
மதரசா சென்று ஓதி பட்டம் பெறாத ஆலிம் - பள்ளிக்கு தொழுக செல்லாத நமாஸி - ஹஜ்ஜுக்கு செல்லாத ஹாஜி - முரீது கொடுக்காத தங்கள் - மருத்துவம் படிக்காத MBBS - ஏழ்மையில் வாழ்ந்த பண்ணையார் -இந்த வரிசையில் சட்டமன்றம் செல்லாத நிரந்தர MLA நமது செய்து அஹ்மத் மாமா அவர்கள். இதை அவர்களிடம் சொன்னால் புன்முறுவல் பூத்துக் கொள்வார்கள்.
தன ஆயுள் இறுதிவரை திராவிட முன்னேற்ற கழக உறுப்பினராகவே இருந்துள்ளார். திமுகவில் ஏற்பட்ட சுனாமிகள் இவருக்கு தென்றலாக தெரிந்தது. தோல்விகளை கண்டு சற்றும் கலங்காத காயல் கலைஞர் அவர் பிறவி கவிஞர் . இன்று ஓதப்பட்ட மாநபி மணிமொழிகளுக்கு விளக்கம் தந்தவர் இன்னார் என்று அவர் புகாரி ஷரீபில் தினம் முழங்கியவர்.
1950 களில் நான் சிறுவனாக இருந்தபோது இலங்கையில் ஏறாவூருக்கு வருவார். கையிலே ஒரு புத்தகம். அட்டைப் படத்தில் அண்ணாவின் புகைப் படத்தின் கீழ் CN அண்ணாதுரை என்று எழுதப் பட்டிருக்கும். முத்துவாப்பா வீட்டு பிள்ளை ஆண்டவன் இல்லை என்று சொல்லும் கட்சியில் இருப்பதா? மூக்கில் விரல் வைத்து முகத்தை சுளித்துக் கொண்டு இவரை வெறுத்து ஒதுக்கிய அந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
1967இல், பகலில் சூரியன் வரும் இரவில் பிறை வரும் அருகில் நட்சத்திரம் வரும் என்று கூட்டணிக்கு விளக்கம் சொல்லி எங்களை எல்லாம் ஊரின் மூலைமுடுக்குகளுக்கு அழைத்து சென்று வாக்கு சேகரித்து திமுகவை அரியணையில் ஏற்றி அழகு பார்த்தவர்.
கட்சி என்ன செய்தது எனக்கு என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை, நான் என்ன செய்தேன் கட்சிக்கு என்று எண்ணியவர். 1977 சட்டமன்ற தேர்தலில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததால் நம் ஊர் மக்கள் உள்ளங்களில் நிரந்தர MLA ஆனவர்.அவர் அணிகின்ற வெள்ளை ஆடைபோல் அவர் பேச்சும் அவர் உள்ளமும் வெண்மையானது. அவர் வீட்டு ஜன்னல்கள்கூட அவர் கட்சி சின்னத்தை சொல்லும். நகரமன்ற துணை தலைவராக அவர் பணியாற்றி கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரராக தன்னை மக்களிடம் அடையாளம் காட்டியவர்.
இத்தனை நற்பண்புகளுக்கு இலக்கணமான MLA அவர்களுக்கு கலைஞரின் நினைவஞ்சலி ஒரு கவிதையாக வெளி வந்தால் நான் சாந்தி அடைய மாட்டேன்.காயல்பட்டினத்தில் - புறவழிச்சாலையில் இருந்து காயல்பட்டினம் உள்ளே வரும் இடத்தில அவர் பெயரால் ஒரு நுழை வாயில் நிறுவப் பட வேண்டும். இதுவே கலைஞர் அவருக்கு செய்யும் உண்மையான நினைவாஞ்சலி ஆகும்..
1959 களில் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் என்று நிந்திக்கப்பட்ட போதும் 2014இல் வாரிசுகளுக்கு மகுடம் சூட்டுபவர்கள் என்று நிந்திக்கப் பட்டபோதும் அதை பொறுமையுடன் தாங்கிக் கொண்டு அந்த கட்சியிலேயே தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு மறைந்து விட்ட ஒரு கொள்கை குன்றுக்கு கலைஞர் செய்யும் கைம்மாறு அதுதான்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்கள் பிழைகளை பொறுத்து அவர்கள் நல்கருமங்களை பொருந்திக் கொண்டு மேலான சொர்க்க வாழ்வை கொடுப்பானாக. குடும்ப தலைவரை இழந்து வாடும் எல்லோருக்கும் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross