காயல்பட்டினம் முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் - தீவுத்தெருவைச் சேர்ந்த எஸ்.செய்யித் அஹ்மத் என்ற DMK செய்யித் அஹ்மத் இன்று 11.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 80. அன்னார்,
அல்லாமா செய்யித் அஹ்மத் ஸாஹிப் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் பேரரும்,
மர்ஹூம் அல்ஹாஜ் முத்து தைக்கா ஷெய்கு அலீ ஆலிம் அவர்களின் மகனும்,
மர்ஹூம் செய்யித் அஹ்மத் முத்துவாப்பா அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி எஸ்.ஏ.ஷெய்கு அலீ, ஹாஃபிழ் எஸ்.ஏ.ஷெய்கு ஹல்ஜீ, ஹாஜி எஸ்.ஏ.காஜா முஹ்யித்தீன் (தொடர்பு எண்: +91 98948 65785) ஆகியோரின் தந்தையும்,
ஹாஜி எஸ்.ஏ.பி.ஜமால் முஹம்மத் ஸித்தீக் என்பவரின் மாமனாரும்,
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் முத்து தைக்கா தை.மு.க.ஷெய்கு அப்துல்லாஹ் (பேஷ் இமாம்), தை.மு.க.காஜா முஹ்யித்தீன், ஹாஜி எஸ்.எம்.பி.காதிர் ஸாஹிப் (தொடர்பு எண்: +91 81224 03640) ஆகியோரின் சகோதரரும்,
ஹாஜி கிழுறு முஹம்மத், ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் ஆகியோரின் மச்சானும்,
ஜெ.எம்.எஸ்.செய்யித் ஐதுரூஸ் புகாரீ, எஸ்.ஏ.செய்யித் அஹ்மத் ரிஸ்வீ, எஸ்.ஏ.செய்யித் ஐதுரூஸ் புகாரீ, ஹாஃபிழ் எஸ்.எச்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா, எஸ்.ஏ.ஜமால் ஷரீஃப், எஸ்.ஏ.செய்யித் அஹ்மத் பிஸ்தாமீ, ஜெ.எம்.எஸ்.செய்யித் அஹ்மத் அபீ வக்காஸ் ஆகியோரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று 19.00 மணியளவில், குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
காயல்பட்டினம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மர்ஹூம் வி.எம்.எஸ்.அனஸுத்தீன் காலத்தில் அதன் தற்காலிக தலைவராக சில காலமும், நாச்சி தம்பி பேரூராட்சி தலைவராக இருந்த காலகட்டத்தில் அதன் துணைத்தலைவராக 5 ஆண்டுகளும் பொறுப்பிலிருந்த அவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளராகவும் சில காலம் பொறுப்பு வகித்துள்ளார்.
1977ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னுற்றக் கழகத்தின் சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வேறுபாட்டில் - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் இரா. அமிர்தராஜிடம் தனது வெற்றிவாய்ப்பை இழந்தமை குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, அதன் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோருடன், மறைந்த எஸ்.செய்யித் அஹ்மத் இருந்த புகைப்படக் காட்சிகள்:-
தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்
கூடுதல் தகவல்கள்:
M.E.L.நுஸ்கீ B.Com.
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 14:55 / 05.08.2014] |