காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி 1979ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. வட்டாரத்திலேயே முதல் மெட்ரிகுலேஷன் பள்ளியாகத் துவங்கிய இப்பள்ளியில், ஒரே காலகட்டத்தில் பயின்ற மாணவர்கள், கால் நூற்றாண்டு - அதாவது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே இடத்தில் சங்கமித்துள்ளனர்.
ஒரே பள்ளியில் / ஒரே வகுப்பில்...
மேலேயுள்ள படத்தில் உள்ள 4 பேர் விபரம்:-
(1) கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர்
(இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர்)
(2) எஸ்.எம்.எம்.அபூதாஹிர்
(கணக்குத் தணிக்கையாளர் - ஆடிட்டர் – குவைத் நாட்டில் பணிபுரிகிறார்)
(3) எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம்
(பொறியாளர் - சீனாவில் பணிபுரிகிறார்)
(4) பி.எம்.கே.ரிஃபாஈ
(ஜெய்ப்பூரில் மாணிக்க வணிகம் செய்து வருகிறார்.)
இந்நால்வரும், 02ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் (முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில்) பயின்ற மாணவர்களாவர். அவர்களுள், கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், பி.எம்.கே.ரிஃபாஈ ஆகிய இருவரும், பின்னர் சென்னை புதுக்கல்லூரியிலும் 3 ஆண்டுகள் - அதாவது மொத்தம் 14 ஆண்டுகள் இணைந்து படித்துள்ளனர்.
ஒரே பள்ளியில் / வெவ்வேறு வகுப்புகளில்...
மேலேயுள்ள படத்தில் உள்ளவர்கள், ஒரே பள்ளியில் - ஒரே காலகட்டத்தில் - வெவ்வேறு வகுப்புகளில் பயின்றவர்களாவர். அவர்களது விபரம்:-
முதல் படத்திலுள்ள 4 பேர் தவிர்த்து,
(1) ஐ.அப்துர்ரஹீம்
(ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தின் மண்டல பொறுப்பாளர்)
(2) எம்.ஓ.எஸ்.அப்துர்ரஹீம்
(திருவனந்தபுரத்தில் வணிகம்)
(3) செய்யித் அஹ்மத்
(ஹாங்காங்கில் பணி / காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயலாளர்)
(4) எம்.யு.முஹம்மத் நூஹ்
(ஹாங்காங்கில் வணிகம்)
(5) எம்.ஏ.பஷீர் அலீ
(தம்மாம் - அராம்கோ நிறுவனத்தில் பணி)
(6) எஸ்.எம்.தைக்கா உமர்
(ஒரிஸ்ஸாவில் தோல் வணிகம்)
(7) கீழக்கரை தமீம்
(அபூதபீயில் பணி / பள்ளியில் விடுதியில் தங்கிப் பயின்றார்.)
[முதலாவது படத்திலும் இவர் இணைந்து நிற்கிறார்.]
வெவ்வேறு பள்ளிகளில் / ஒரே டியூஷனில்...
மேலேயுள்ள படத்தில் உள்ளோர், ஒரே ஆண்டில் - வெவ்வேறு பள்ளிகளில் - ஒரே டியூஷனில் பயின்ற மாணவர்களாவர். விபரம் வருமாறு:-
முதல் 2 படங்களிலுள்ளோரைத் தவிர்த்து,
(1) எம்.எஸ்.செய்யித் இஸ்மாஈல்
(ஹாங்காங்கில் வணிகம்)
(2) டீ.செய்யித் இஸ்மாஈல்
(ஹாங்காங்கில் பணி)
(3) அப்துல் அஜீஸ்
(சீனாவில் வணிகம்)
(4) அரபி முஹம்மத் ஸாலிஹ் (எ) ஃபாஸீ
(வேலூரிலுள்ள VIT பல்கலைக் கழகத்தில், Micro Bio-Technology பேராசிரியர்)
(5) எம்.ஏ.முஹம்மத் ஸாஜித்
(துபையில் பணி)
(6) எம்.எஸ்.ஷேக்
(துபையில் பணி)
(7) எம்.ஏ.தாவூத்
(துபையில் பணி)
மேலேயுள்ள 3 படங்களிலும் மொத்தமாக 17 பேர் அடக்கம். இவர்கள் அனைவரும் கால் நூற்றாண்டு - அதாவது 25 ஆண்டுகளுக்குப் பிறகு, திருச்செந்தூர் அருகிலுள்ள வாவு பழத்தோட்டத்தில் சங்கமித்தனர். அங்கு விருந்துண்டு, பெருநாள் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொண்டனர்.
இச்சங்கமத்தில் பங்கேற்றோர் இதுகுறித்து கருத்துக் கூறுகையில், “நாங்கள் யாவரும் அவ்வப்போது ஓரிருவராக சந்தித்துக்கொள்வது வழமைதான் என்றாலும், நாங்கள் 18 பேரும் மொத்தமாக ஒரே இடத்தில் சங்கமிப்பது 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் நிகழ்ந்துள்ளது... இது எங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாளாகும்... என்றனர்.
தகவல் & படங்கள்:
K.A.M.முஹம்மத் அபூபக்கர் |