ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் பாஜுல் ஹமீதின் தங்கை - காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த எம்.ஏ.அமீனுல் ஆரிஃபா இன்று 07.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 42. அன்னார்,
லேனா முஹம்மத் அப்துல் காதிர் என்பவரின் மகளும்,
வி.எஸ்.எச்.செய்யித் உமர் என்பவரின் மருமகளும்,
எஸ்.ஓ.ஷாஹுல் ஹமீத் (தொடர்பு எண்: +91 80151 84282) என்பவரின் மனைவியும்,
ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.பாஜுல் ஹமீதின் (தொடர்பு எண்: +91 98943 32428) தங்கையும்,
எஸ்.எச்.உமர் அப்துல்லாஹ் என்பவரின் தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 17:48 / 04.08.2014]
4. Re:... posted bynetcom buhari (chennai)[04 August 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 36198
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் நண்பன் s .o & பாசுள் ஹமீதுகும் மட்டும் குடுபதினர்க்கு என் சலத்தினை தெரிவித்து கொள்கின்றேன். மர்ஹூமா அவர்களின் மறுமை வாழ்கையை அல்லாஹு தலா சிறப்பாக ஆகி கபுரை பிரகாசமாக ஆகி வைப்பானாக ஆமீன்
அன்பு நண்பன் SO விற்கும் மார்ஹுமா அவர்களின் குடும்பத்தினருக்கும் இறைவன் பொறுமையை கொடுப்பானாக. வல்லோன் அல்லாஹ் மர்ஹூம அவர்கள் பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவர்க்கத்தை கொடுத்து கிருபை புரிவான்.
அவர்கள் விட்டு சென்றிருக்கும் குடும்பத்திற்கு இதை விட சிறப்பானதை கொண்டு அருள் புரிவான் .. ஆமீன்
13. உலகில் இவர் அடையப் பெறாத இன்பங்கள பலவற்றை நீ அவருக்கு கப்ரிலும் சுவர்க்கத்திலும் கொடு...!!! posted byS.K.Shameemul Islam (Chennai)[04 August 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36209
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
துக்கத்தில் துவண்டு போகும் அளவு மிகவும் அதிர்ச்சியான செய்தி.
இன்று காலையில் என் தூக்கத்தை கலைத்தது என் ஆருயிர் நண்பன் எஸ்.ஓ.வின் மதிப்பிற்குரிய மனைவி இறந்த செய்திதான்.
சில காலமாக பெரு நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு தன் இரட்சகனின் நாட்டப்படி அவன்பால் மீண்டு இருக்கிறார்.
இரண்டு வருடத்திற்கு முன் அருமை நண்பன் கீழே விழுந்ததில் கால் முறிந்து படுக்கையில் கிடந்த நேரம் ஒரு மனைவி என்பதையும் விட அதிகமாக அவனருகில் இருந்து முழு பணிவிடையையும் செய்து கொண்டிருந்தது என் கண்களில் இன்றும் நிழலாடிக் கொண்டிருக்கிறது.
அதற்குப் பின் அவன் சிறிது சிறிதாக தேறி வந்தபோது அவனுக்கு நடை பயின்று கொடுக்க நமதூர் கடற்கரையில் தன்னலம் பாராது கண்துஞ்சாது அதிகாலையில் தினமும் உடன் சென்றது இந்த இளம் மங்கை தான்.
அவரது கணவர் முழுதாக குணமடைந்து என்னுடன் மீண்டும் பணி செய்ய வந்த போது தான் இவர் சுகவீனமுற்றார்.
அமைதி, பொறுமை, உதவும் மனப்பான்மை, நற்குணம், நற்பண்பிற்கு சொந்தக்காரர் இந்த மாது.
தனக்காக பெரிதாக எதற்கும் ஆசைப்பட்டதில்லை.
தன் பிள்ளைகளை மார்க்க அடிப்படையில் உருவாக்கிட முயற்சி மேற்கொண்டவர்.
யா அல்லாஹ்.....!!!
சுவர்க்கம் செல்ல ஒரு பெண்ணிற்கு அனைத்திற்கும் மேலாக தனது கணவனின் திருப்தி தான் வேண்டும் என உன் ஹபீப் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்றால் இதோ உன் அடியார் அந்த கணவனின் முழுத் திருப்தியை பெற்றவாராக உன் பால் மீண்டிருக்கிறார்.
யா அல்லாஹ். உலகில் இவர் அடையப் பெறாத இன்பங்கள பலவற்றை நீ அவருக்கு கப்ரிலும் சுவர்க்கத்திலும் கொடு.
இவர் சுகவீனப்பட்டு சில காலம் பட்ட துன்பங்களையும் நீ இவர் மண்ணரை வாழ்வில் இன்பமாக்கி வை.
உன் அடியார்களை விட பொங்கு கருணையாளனும் தொடர் கிருபையாளனும் நீயே.
எங்கள் இரட்சகா. இவரது பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடு.
யா அல்லாஹ், உனது ஹபீப் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்களே,
'யாரொருவர் நோயால் பாதிக்கப்பட்டவராக இறப்பெய்தினாரோ அவர் ஷஹீதுடைய அந்தஸ்தைப் பெறுகிறார், மேலும் கப்ரின் சோதனைகளிலிருந்து காக்கப்படுகிறார், மேலும் ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் சுவனபதியிலிருந்து உணவளிக்கப்படுகிறது (இப்னு மாஜா)' அவை அனைத்தையும் இவருக்கு கொடு இரட்சகா.
யா அல்லாஹ், இவரது பிரிவால் துயருற்றுள்ள என் அருமை நண்பன் எஸ்.ஓ.உக்கும் அவனது பிள்ளைகள், அருமை நண்பன் பாசுல் ஹமீத் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இந்த இழப்பை ஈடு செய். அவர்களுக்கு சிறப்பானதைக் கொடு. ஆமீன்.
நீங்கா துயருடன்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்
& குடும்பத்தார்,
எஸ்.கே.ஹவுஸ் காயல்பட்டணம் &சென்னை.
21. இன்னா லில்லாஹி... posted byS.K.Salih (Kayalpatnam)[05 August 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 36233
நல்ல மனைவிக்கு இலக்கணமாக வாழ்ந்த சகோதரி நம்மை விட்டும் பிரிந்துவிட்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது கணவர் எனதன்பிற்குரிய எஸ்.ஓ. காக்கா, சகோதரர் பாஜுல் ஹமீத் காக்கா உள்ளிட்ட - மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்
அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
22. Re:... posted byR.Aboobucker (Chennai)[05 August 2014] IP: 192.*.*.* United States | Comment Reference Number: 36252
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் அவர்களுடைய பிழைகளை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவனத்தை கொடுப்பானாக. S.O குடும்பத்திற்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக.
24. அல்லாஹ் மஹ்பிரத்தை நல்குவானாக! posted byM.S. Abdul Hameed (Dubai)[07 August 2014] IP: 91.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36285
பள்ளிப் பருவத்தில் என்னுடன் ஒன்றாகவே சுற்றித் திரிந்த என் ஆருயிர் நண்பன் S.O. ஷாஹுல் ஹமீதுக்கும், என் ஆருயிர் நண்பர் பாசுல் ஹமீதுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அல்லாஹ்வின் பால் சென்று விட்ட அன்னாருக்கு அல்லாஹ் உயர்ந்த சுவர்க்கத்தை தந்தருள்வானாக.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!
அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross