சஊதி அரபிய்யா நாட்டில் 28.07.2014 அன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டில் வசிக்கும் காயலர்கள் அவரவர் பகுதியிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
தொழுகை நிறைவுற்ற பின் - ரியாத், தம்மாம், அல்கோபர், ரஹீமா ஆகிய நகரங்களைச் சேர்ந்த காயலர்கள் 10 பேர் ரஹீமாவில் வசிக்கும் காயலர் கலீலுர்ரஹ்மான் இல்லத்தில் ஒன்றுகூடி, தமக்கிடையில் பெருநாள் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொண்டனர். காலை - மதிய பெருநாள் உணவுகளை அங்கு இணைந்தமர்ந்து உண்டனர்.
பின்னர், ஜுபைல் நகரிலுள்ள கடற்கரைக்குச் சென்று கால்பந்து விளையாடிய பின், கோழி இறைஞ்சி - சிக்கன் பார்பிக்யூ சுட்டு, உண்டு பொழுதைக் கழித்தவர்களாக, இரவு வேளையில் வசிப்பிடம் திரும்பினர்.
தகவல் & படங்கள்:
தம்மாமிலிருந்து...
செய்யித் முஹம்மத் புகாரீ |