ரமழான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாதத்தில் 6 நாட்கள் நோன்பு நோற்பது, அந்த வருடம் முழுவதும் நோன்பு நோற்ற பலனுக்கு நிகரானது என நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளதைக் கருத்திற்கொண்டு, ஆண்டுதோறும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளையடுத்த 6 நாட்களில் முஸ்லிம்களில் பெரும்பாலோர் நோன்பு நோற்பது வழமை. வேறு சிலர், அம்மாதத்தில் தமக்கு வசதிப்பட்ட ஏதேனும் 6 நாட்களில் நோன்பு நோற்பர்.
ஷவ்வால் முதல் நாளையடுத்த 6 நாட்களில் நோன்பு நோற்பவர்களுக்காக காயல்பட்டினம் நகரின் சில பள்ளிவாசல்களில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி, இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.), அஹ்மத் நெய்னார் பள்ளி, குருவித்துறைப் பள்ளி, மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடப்பாண்டு ஷவ்வால் 6 நோன்புக்காக இஃப்தார் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இரட்டை குளத்துப் பள்ளியில் இந்த வழமை நடப்பாண்டு முதல் புதிதாகத் துவக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரமழான் மாதத்தில் நகரில் பெரும்பாலும் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் இஃப்தார் - நோன்பு துறப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்படும் வழமையுள்ளது. ஆனால் ஷவ்வால் 6 நோன்பைப் பொருத்த வரை, குறிப்பிட்ட சில பள்ளிவாசல்களில் மட்டுமே இஃப்தார் ஏற்பாடுகள் செய்யப்படுவதால், மஹல்லா ஜமாஅத் வேறுபாடுகளின்றி அப்பள்ளிவாசல்களில் பெரும்பாலும் அனைத்து ஜமாஅத்தைச் சேர்ந்த - 6 நோன்பு நோற்றவர்களும் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வழமை உள்ளது. அந்த அடிப்படையிலேயே நடப்பாண்டு நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர். அவர்களுக்கு வழமை போல பேரீத்தம்பழம், தண்ணீர், நோன்புக் கஞ்சி, குளிர்பானம், வடை வகைகள் பரிமாறப்படுகின்றன. காட்சிகள் வருமாறு:-
[முஹ்யித்தீன் பள்ளியில்...]
[இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) இல்...]
[குருவித்துறைப் பள்ளியில்...]
படங்களுள் உதவி:
குளம் K.S.முஹம்மத் யூனுஸ்
காயல்பட்டினம் நகர பள்ளிகளில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ஷவ்வால் 6 நோன்பு இஃப்தார் நடைபெற்ற தகவல்கள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஹ்யித்தீன் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐ.ஐ.எம். தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |