ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றம், துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி இணைந்து - மகளிருக்கான முதலுதவி பயிற்சி முகாம் நடத்தவுள்ளதாகவும், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினரும் - செய்தி தொடர்பாளருமான ஷாஹுல் ஜிஃப்ரீ கரீம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம் (KWAUK) மற்றும் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி இணைந்து நடத்தும் 'நான்காவது முதலுதவி பயிற்சி வகுப்பு' (பெண்கள் மட்டும்), வருகின்ற ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி (வியாழக்கிழமை), துளிர் கேளரங்கத்தில், காலை 09.30 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த பயிற்சி வகுப்பை தூத்துக்குடி செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் பயிற்சியாளர்கள் நடத்தி தர இசைந்துள்ளார்கள்.
பெண்களுக்கான சிறப்பு வகுப்பாக இந்த முதலுதவி பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பின் சிறப்பம்சமாக 'குழந்தைகள் மற்றும் சிறுவர் / சிறுமியருக்கு ஏற்படும் விபத்துக்களை எவ்வாறு தடுப்பது மற்றும் கையாள்வது' என்பதை பற்றி செயல்முறை மற்றும் வகுப்பறை பயிற்சி அளிக்கப்படும். இந்த வகுப்பில் கலந்து கொள்ள மொத்தம் 60 இடங்கள் மட்டுமே உள்ளன.
பயிற்சி வகுப்பின் (சலுகை) கட்டணம் ரூபாய் 100 மட்டுமே. (சான்றிதழ், போக்குவரத்து, சிற்றுண்டி உட்பட.)
கீழ்காணும் இடங்களில் விண்ணப்பங்களைப் பெற்று முன்பதிவு செய்துகொள்ளலாம்.
1. கலாமி பேஷன், USC கால்பந்து வணிக வளாகம், காயல்பட்டினம் தொலைபேசி எண்: 284777
2. ஜாஸ்மின் பாரடிஸ், மெயின் ரோடு, காயல்பட்டினம் தொலைபேசி எண்: 280345
3. LMS ஸ்டோர்ஸ், மொஹிதீன் தெரு, காயல்பட்டினம் தொலைபேசி எண்: 281463
4. MAZAYA மெடிகல்ஸ், சதுக்கை தெரு, காயல்பட்டினம் தொலைபேசி எண்: 285770
இந்த வகுப்பில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியின் இறுதியில் தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இம்முகாமில் பெறப்படும் கட்டணம் அனைத்தும் துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்பதை அறியத் தருகிறோம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கட்டணத்துடன் சமர்ப்பிக்க கடைசி நாள்: 17.08.2014 (ஞாயிற்றுக்கிழமை)
மேலதிக விபரங்களுக்கு எங்களது மின்னஞ்சல் முகவரியில் - uk@kayalpatnam.org.uk தொடர்பு கொள்ளவும்.
முதலுதவி கற்போம்... மனித உயிர் காப்போம்....
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றம் சார்பில் இதற்கு முன் நடத்தப்பட்ட - மகளிருக்கான முதலுதவி பயிற்சி முகாம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |