“இந்தியாவில் வட்டியில்லா வங்கி அமைப்பதை நோக்கி” என்ற இலக்குடன் பயணித்து வரும், ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் நிறுவனத்தின் காயல்பட்டினம் கிளை அலுவலகம், கடந்த ஜூன் மாதம் 17ஆம் நாளன்று துவக்கப்பட்டது.
அந்நிறுவனத்தின் சார்பில், வெளிநாடு வாழ் காயலர்கள் பங்கேற்கும் ஈத் மிலன் - பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, வரும் ஆகஸ்ட் மாதம் 01ஆம் நாளன்று நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை:-
பெருமதிப்பிற்குரிய வெளிநாடு வாழ் காயலர்கள் அனைவருக்கும் ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்க காயல்பட்டினம் கிளை நிர்வாகிகளின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
“இந்தியாவில் வட்டியில்லா வங்கி அமைப்பதை நோக்கி” என்ற இலக்குடன் பயணித்து வரும், ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் - நோன்புப் பெருநாளை முன்னிட்டு தாயகம் வந்திருக்கும் பெருமக்களாகிய தங்களை வரவழைத்து, இதன் நோக்கம் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து விளக்கும் நோக்குடன், “வெளிநாடு வாழ் காயலர்கள் பங்கேற்கும் ஈத் மிலன் - பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, இன்ஷாஅல்லாஹ் வரும் ஆகஸ்ட் மாதம் 01ஆம் நாளன்று 19.15 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி (தாமரை ஸ்கூல்) வளாகத்தில் நடைபெறவுள்ளது.
வெளிநாடு மற்றும் வெளியூர்கள் வாழ் காயலர்களுள் யார், யார் ஊரில் உள்ளனர் என்பதை முழுமையாக அறிந்துகொள்ள எங்களுக்கு வாய்ப்பில்லாததால், இச்செய்தியைப் பார்க்கும் வெளிநாடு வாழ் காயலர்கள் அனைவரும், இதையே நாங்கள் தங்களை நேரில் கண்டு அழைத்ததாகக் கருதி, குறித்த நேரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க வருமாறு தங்களை அன்புடன் வேண்டுவதோடு, தங்களுக்குத் தெரிந்து யாரேனும் வெளிநாடுகளிலிருந்து ஊர் வந்திருந்தால் அவர்களுக்கும் இத்தகவலைக் கூறி பங்கேற்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
I.அப்துர்ரஹீம்
ஜன்சேவா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |