காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜமாஅத் அமீரகப் பிரிவின் கலந்தாலோசனைக் கூட்டம் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
கடந்த 25.07.2014 வெள்ளியன்று மாலையில் காயல் அஸ்ஹர் ஜமாஅத் பொதுக்குழுக் கூட்டம் துபையில் சிறப்பாக நடைபெற்றது.
காயல் அஸ்ஹர் ஜமாஅத்தின் ஆலோசனைக் கமிட்டி உறுப்பினர் தாவூத் ஹாஜியார் அவர்களின் இல்லத்தில் வைத்து நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஜமாஅத்தின் தலைவர் துணி உமர் காக்கா அவர்கள் தலைமை தாங்கினார்.
ஹாஃபிழும், பொறியாளருமான முஹம்மது கனி அவர்கள் இறைமறை வசனங்களை ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ரியாத் காயல் நல மன்றத் தலைவர் சகோ. ஷேக் தாவூத் இத்ரீஸ் அவர்கள் கலந்துகொண்டார்.
செயற்குழு உறுப்பினர் சகோ. டி.ஏ.எஸ். மீரா ஸாஹிப் அவர்கள் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். ஜமாஅத் மூலமாக செய்யப்படும் சமூகநலப் பணிகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் புதுப்பித்தல் பணிக்குத் தேவைப்படும் பொருளாதாரப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உறுப்பினர்கள் உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மாதந்தோறும் திருக்குர்ஆன் வகுப்புகள், தர்பிய்யா, தஸ்கிய்யா வகுப்புகள் ஆகியவற்றை தொய்வின்றி தொடந்து நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காயல் பதியிலிருந்து வருகை தந்துள்ள காயல்பட்டினம் தஃவா சென்டரின் இஸ்லாமிய அழைப்பாளர் சகோ. ஜக்கரியா அவர்கள் அழைப்புப் பணியின் முக்கியத்துவம் குறித்தும், அதனால் சமுதாயத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் அழகுற உரை நிகழ்த்தினார்.
பின்னர் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
துபையிலிருந்து...
M.S.அப்துல் ஹமீத்
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜமாஅத் அமீரகப் பிரிவு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross